'தேசிங்கு ராஜா’ படத்தின் பிரிவியூ ஷோவுக்கு டி-ஷர்ட், ஜீன்ஸ் சகிதமாக வந்த பிந்து மாதவி, படத்தில் சூரியும் தானும் வரும் அலப்பறைக் காட்சிகளுக்கு எல்லாம் தொடையைத் தட்டி (அவர் தொடையைத்தாங்க!) விசில் அடித்து கலாட்டா செய்து சிரித்தார். ஷோ முடிந்து வெளியே வந்த பிந்து மாதவியிடம், ''நீங்க எப்பவுமே இப்படித்தானா, இல்லே இப்படித்தான் எப்பவுமா?'' என்றதற்கு, ''நான் அர்ஜுன் ரசிகை. அவரைப் போலவே ஆக்ஷன் படம் பண்ண ஆசை'' என்றார். தொடை இருக்கு... தட்றீங்க!

ஜூலை 3 அன்று, விஜய் திருமண மண்டபத்தில் தன் பிறந்தநாளை எளிமையாகக் கொண்டாடினர் எஸ்.ஏ.சந்திரசேகரன். ''விஜய் ரசிகர்களுக்கு அழைப்பு இல்லையா?'' என்று பத்திரிகை நண்பர்கள் கேட்க, ''பிறந்த நாள்னாலே சிலருக்குப் பிடிக்க மாட்டேங்குதே'' என்றார் குத்தலாக. இப்படி சோகமா பஞ்ச் பேச விட்டுட்டாங்களே?

'பேராண்மை’க்குப் பிறகு நீண்ட காலம் படம் இயக்காமல் இருந்த ஜனநாதன், ஜீவா-ஜெயம் ரவி இருவரும் நடிக்க, ஒரு படத்தை இயக்குவதாக அறிவித்திருந்தார். ஜீவாவால் நடிக்க முடியாத சூழலில், இப்போது விஜய் சேதுபதி நடிக்கிறார். புரட்சி வாழ்த்துகள்!

கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறார் சிவகார்த்திகேயன். 'மான் கராத்தே’ என்ற படத்தில் சிவாவுக்கு ஜோடி ஹன்சிகா. அழகைக் கூட்ட லண்டன் போயுள்ளாராம் சிவா. ஹன்சிகா மான், நீங்க கராத்தேவா பாஸ்?

பாலிவுட்டில் அக்ஷய் குமாருடன் 'என்டர்டெய்னர்’ படத்தில் நடிப்பதற்காக பாங்காக் போயுள்ளார் தமன்னா. இந்தப் படத்தில் தமன்னாவுக்கு ஃபிராடு கேரக்டராம். விதவிதமான காஸ்ட்யூம்களைத் தமன்னாவுக்காகத் தயார் செய்துவருகிறார்கள். நல்லா கிளாமரான டிரெஸ் டிசைன் பண்ணுங்கோ!

ராம் சரண் - ஸ்ருதிஹாசன் நடிக்கும் 'எவடு’ தெலுங்குப் படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்கிறார் எமி ஜாக்சன். வெள்ளைக்கார அம்மணிக்கு ஸ்விம் ஷூட் காட்சி ஒன்றும் உண்டாம். ஸ்ருதி, எமி இருவரும் போட்டி போட்டு, காட்டு காட்டுனு காட்டியிருக்காங்களாம். அதிர்ஷ்டக்கார ஆந்திராகாருகளா!

'தேச முத்ரு’ என்ற படம் மூலம் தெலுங்கில் அறிமுகமான ஹன்சிகா வுக்கு, தமிழ் கை கொடுத்தது போல் தெலுங்கு அமையவில்லை. காஜல், தமன்னா, அனுஷ்கா மூவருக்கும் தமிழ், தெலுங்கு இரண்டிலும் மார்க்கெட் இருப்பது போல் தனக்கு ஏன் இல்லை எனத் தன் நல விரும்பிகளுடன் தீவிர டிஸ்கஷனில் ஈடுபட்டுள்ளாராம். முதல்ல நடிங்க மேடம்!

எம்.ஜி.ஆர். நடித்த 'சிரித்து வாழ வேண்டும்’ படம்தான் இப்போது இந்தியில் ராம் சரண் நடிக்கும் 'ஜன்ஜீர்’ படம். ராம் சரண் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் முதல் படம் இது. பிரியங்கா சோப்ரா ஜோடியாக நடித்துள்ள இந்தப் படத்தை இந்தியில் இருந்து தெலுங்கு, தமிழில் கொண்டுவரப் போறாங்களாம். வாழ்க்கை ஒரு வட்டம்டா!