சினிமா என்றால் காதல், காமெடி, பஞ்ச் டயலாக்குகள், பறந்து பறந்து அடிக்கும் 'டிஷ்யூம்’கள் மட்டும்தானா?

'ஜாலி எல்.எல்.பி’, 'சைத்தான்’, 'ஆக்ஸிடென்ட் ஆன் ஹில் ரோடு’, 'தலாஷ்’ போன்ற பாலிவுட் படங்கள் மும்பை மற்றும் டெல்லியில் நடந்த சாலை விபத்துக்களைப் பின்னணியாகக்கொண்டவை.

படத்தின் டைட்டிலைப்போலவே ஜாலியான படம், 'ஜாலி எல்.எல்.பி’. பெரிய கேஸ் கிடைக்காமல் அல்லாடும் சுமாரான வக்கீல் ஹீரோ ஜாலி. அவனுக்கு ஒரு காதலி. பிளாட்ஃபாரத்தில் தூங்கிய எளிய மனிதர்களைப் போதையில் கார் ஏற்றிக் கொல்கிறான் பணக்கார இளைஞன் ஒருவன். அவனது தந்தை தரும் கத்தை கத்தையான பணத்துக்கு ஆசைப்பட்டு, 'விபத்தே நடக்கவில்லை’ என வாதாடுகிறார் இந்தியாவின் நம்பர் ஒன் வக்கீல் தேஜேந்தர் ராஜ்பால். 'டெல்லியில் இந்த ஆண்டு மட்டும் 7,516 சாலை விபத்துகள் நடந்திருக்கின்றன. மீடியாக்களின் உபயத்தால் இந்த ஒரு விபத்து மட்டும் இப்படி பூதாகரமாக்கப்பட்டுள்ளதை வைத்தே தெரியவில்லையா, இதன் பின்னணியில் அரசியல் இருக்கிறது என்று?’ என்று தொடங்கி, படிப்படியாக கேஸுக்கான ஐ விட்னெஸ் இல்லை, உப்பு இல்லை, உறைப்பு இல்லை என கேஸை உடைக்கிறார்.

இந்த நிலையில்தான் ஹீரோ ஜாலியை சக வக்கீல் ஒருவர் உசுப்பேத்திவிட, பொதுநல வழக்கைத் தாக்கல் செய்து, தானே அந்த வழக்கில் ஆஜராகிறான் ஜாலி. கொஞ்சம் கொஞ்சமாய் தேஜேந்தரை ஜெயிக்கும் வேளையில் யாரும் எதிர்பாராத அடுத்தடுத்த ட்விஸ்ட்கள் வருகின்றன. ஒரு வக்கீல் பணத்துக் காக என்னெவெல்லாம் செய்யலாம் என்ற நீதித் துறையின் ஓட்டைகளைப் படத்தில் அப்பட்டமாகக் காட்டியதோடு... நல்லது செய்யப்போனால் என்னெவெல்லாம் குடைச்சல் வரும் என்ற கசப்பான உண்மையையும் காட்டுகிறார்கள். படத்தின் துவக்கத் திலேயே 'இந்தக் கதை 1999 சஞ்சீவ் நந்தா ஹிட் அண்ட் ரன் கேஸை பின்புலமாகக்கொண்டது’ என டைட்டிலில் போடுவது துணிச்சல்! கில்லாடி ஸ்டார் வக்கீலாக வரும் தேஜந்தர் பாத்திரத்தில் நடித்தது, பொமன் இரானி. ஹீரோ அர்ஷத் வர்ஷி 'வசூல் ராஜா’வின் ஒரிஜினலான 'முன்னாபாய் எம்.பி.பி.எஸ்’ ஸில் நம்ம பிரபு ரோலில் நடித்தவர். இருவரைத் தவிர எந்தவித ஸ்டார் அட்ராக்ஷனும் படத்தில் இல்லை. ஆனால், 10 கோடி பட்ஜெட் படம், 35 கோடிக்கும் மேல் வசூலை வாரிக் குவித்தது.

கிட்டத்தட்ட இதே கதையமைப் போடு வந்த படம்தான் 'சைத்தான்’. குடி, கும்மாளம், போதை என இரவு வாழ்க்கையைக் கொண்டாடும் மும்பை இளைஞர்களைப் பற்றிய கதை. ஒரு நடுநிசியில் சாலை ஓரம் படுத்திருக்கும் மனிதர்களை ஹம்மர் காரால் ஏற்றிக் கொன்று விடுகிறார்கள் சில பணக்காரர்கள். ஒரு மோசமான இன்ஸ்பெக்டர், அவர்களைக் கண்டுபிடிக்கிறார். வழக்குப் போடாமல் விட்டுவிட, 25 லட்சம் லஞ்சமாகக் கேட்டு மிரட்டுகிறார். அந்த இளைஞர் பட்டாளம் ஆரம்பத்தில் முடியாது என்று மறுத்தாலும் இன்ஸ்பெக்டரின் டார்ச்சருக்குப் பயந்து தங்களுக்குள் ஒருவரைக் கடத்திவிட்டதாகப் பெற்றோர்களை மிரட்டிப் பணம் பறிக்கலாம் எனத் திட்டம் தீட்டுகிறார்கள். ஆனால், கடத்தல் நாடகம் அவர்களுக்கே வினையாக முடிகிறது. ஏகப்பட்ட

போலீஸ் சேஸிங்கிற்குப் பிறகு இளைஞர்களுக்கான படிப்பினையோடு படம் முடிகிறது. படத்தை மணிரத்னத்தின் அசிஸ்டென்ட் பிஜோய் நம்பியார் இயக்கி இருந்தார் ('டேவிட்’ எடுத்தவர்). படத்தை லோ பட்ஜெட்டில் தயாரித்து கல்லா கட்டியது பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப்பேதான். மும்பையின் இரவு வாழ்க்கையை இவ்வளவு தத்ரூபமாக யாரும் படம்பிடித்தது இல்லை என்ற பாராட்டுக்களோடு, மும்பையில் அடுத் தடுத்து நடக்கும் பிளாட்ஃபார மரணங் களையும் தவறான போலீஸ்காரர்கள் ஒரு கேஸை மறைக்க என்னெவெல்லாம் செய் வார்கள் என்றும் வெளிச்சம் போட்டுக் காட்டியதாக மீடியாக்கள் பாராட்டுப்பத்திரம் வாசித்தன.

பெரிய ஹிட் ஆகாவிட்டாலும் இதேபோல 'ஆக்ஸிடென்ட் ஆன் ஹில் ரோடு’ என்ற படம் மும்பையின் சாலை விபத்தைப் பேசியது. ஆனால் ஒரு சின்ன மாற்றம். படத்தில் ஒரு பெண் விபத்தை நிகழ்த்துகிறாள். நடிகை செலீனா ஜெட்லி ஒருவர்மீது காரை ஏற்றிக் கொன்றுவிட்டு, உடலை மறைக்கப் முயற்சிப்பார். அவரால் மறைக்க முடிந்ததா என்பதே படத்தின் க்ளைமாக்ஸ்.

அமீர்கான் கதை நாயகனாக நடித்த 'தலாஷ்’ படமும் மோசமான... ஷாக்கிங்கான சாலை விபத்துக் காட்சியோடு தொடங்குகிறது. இதில் பலியானது பிரபல நடிகர் என்பது கூடுதல் கவன ஈர்ப்பு. ஏற்கெனவே விபத்தில் தன் மகனைப் பலிகொடுத்த இன்ஸ்பெக்டர் அமீர்கான், அந்த சாலை விபத்தை விசாரிக்கிறார். அடுத்தடுத்த திருப்பங்கள், யாரும் யூகிக்க முடியாத வித்தியாசமான க்ளைமாக்ஸ் எனப் படம் புது தினு சாய் பாலிவுட் ரசிகர்களை ஈர்த்தது. படத்தை இயக்கியது ரீமா கக்டி என்ற அஸ்ஸாமைச் சேர்ந்த பெண் இயக்கு நர். இவரை நம்பி 40 கோடிக்கு இன்வெஸ்ட் செய்த அமீர் அண்ட் கோ, இதுவரை 174 கோடியை அறுவடை செய்திருக்கிறது.

இதைப் படிச்சதும் ஆக்சிடென்ட் படம் எடுக்கலாம்னு கூட்டம் கூட்டமாக் கிளம்பிடாதீங்க தமிழ் டைரக்டர்ஸ்!

-ஆர்.சரண்