Published:Updated:

புதுச்சேரியில் தொடங்கியது இந்திய திரைப்பட விழா–2014!

விகடன் விமர்சனக்குழு
புதுச்சேரியில் தொடங்கியது இந்திய திரைப்பட விழா–2014!
புதுச்சேரியில் தொடங்கியது இந்திய திரைப்பட விழா–2014!

புதுச்சேரி: இந்திய திரைப்பட விழா-2014 நேற்று புதுச்சேரியில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத் துறையும், மத்திய அரசின் திரைப்பட விழா இயக்குநகரம் மற்றும் புதுச்சேரி நவதர்ஷன் திரைப்பட கழகமும் இனணந்து ஒவ்வொரு வருடமும் இந்தியத் திரைப்பட விழாவை நடத்தி வருகிறது. கடந்த 30 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த விழா, நேற்று (14ஆம் தேதி) தொடங்கியது. இந்த விழா 18ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

புதுச்சேரியில் தொடங்கியது இந்திய திரைப்பட விழா–2014!

பொதுமக்கள் மற்றும் இளைய சாமுதாயத்தினரிடையே, நல்ல சினிமாவைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இந்தியாவின் அனைத்து மொழி மக்களிடமும் ஒருமைப்பாட்டை வளர்க்கவும், அவர்களின் வாழ்வை ஆக்கப்பூர்வமான பாதைக்கு அழைத்து செல்லும் நோக்கிலும் இந்த விழா நடத்தப்படுகிறது.

புதுச்சேரி அரசு, புதுச்சேரி மாநிலத்தின் பிராந்திய மொழி திரைப்படங்களில் சிறந்த திரைபடத்தை தேர்வு செய்து, அந்த திரைப்படைத்தின் இயக்குநருக்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருதும், பணமுடிப்பும் வழங்கி சிறப்பித்து வருகிறது. ஏற்கனவே, வழங்கப்பட்டு வந்த ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசை, ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தி கடந்த வருடம் முதல் புதுச்சேரி முதலமைச்சர் வழங்கி வருகிறார்கள்.

இந்த ஆண்டு சிறந்த பிராந்திய மொழி திரைப்படதிற்கான சங்கரதாஸ் சுவாமிகள் விருதை ’தங்க மீன்கள்' திரைப்பட இயக்குனர் ராம் பெற்று கொண்டார்.

விழாவில் ராம் பேசுகையில், “இந்த படத்திற்கு விருது கிடைத்ததற்கு எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அதுவும் குழந்தைகள் தினத்தன்று கிடைப்பதில் மிகவும் பெருமையாக உள்ளது. இந்த விழா தொடர்ந்து 30 வருடங்களாக இங்கு நடந்து வருகிறது என்பது ஆச்சிரியத்தை அளிக்கிறது. இவ்விழா மேலும் பல வருடங்கள் நடக்க வேண்டும்.

புதுச்சேரியில் தொடங்கியது இந்திய திரைப்பட விழா–2014!

நல்ல திரைப்படங்களுக்கு இதுபோல் அங்கீகாரம் கிடைக்க வேண்டும். இதில் எனக்கு மகிழ்ச்சி தரக்கூடியது என்னவென்றால் தங்கமீன்கள் திரைப்படம் ஒன்றரை வருடங்களுக்கு பிறகும் ஒரு திரையரங்கில் திரையிடப்பட்டிருக்கிறது. இதுதான் உண்மையான வெற்றி. ஒரு நல்ல படத்தின் வெற்றி, நீண்ட கால வெற்றி என்று தங்கமீன்கள் படம் எனக்கு கற்றுக் கொடுத்துள்ளது. இதனால் எனக்கு பொறுப்புணர்ச்சியும் அதிகமாகியுள்ளது. இப்படத்தை அங்கீகரித்த அனைவருக்கும் நன்றி” என்றார்.

இந்த இந்த விழா தொடர்ந்து நான்கு நாட்களுக்கு நடக்கவுள்ளது. விழாவில் மற்ற மொழி படங்களான ஹிந்தி, மலையாளம், கன்னடம் மொழிகளில் சிறந்து விளங்கிய படங்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது.

-கற்பகம்

(மாணவப் பத்திரிகையாளர்)

படங்கள்: ஜெ.முருகன்