Published:Updated:

படம் ரெண்டு நாயகிகள் நாலு !

'தெய்வத்திருமகள்' படத்தை தொடர்ந்து 'ராஜபாட்டை', 'கரிகாலன்' என இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார் விக்ரம்.

'ராஜபாட்டை' படத்தில் விக்ரமுக்கு நாயகியாக தீபிகா ஷேத் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். சுசீந்திரன் இயக்கி வருகிறார். விக்ரம், தீபிகா ஷேத் இருவரும் பங்கு பெறும் டூயட் பாடல் ஒன்றை தற்போது படமாக்கி வருகிறார்கள்.

சோழ வரலாற்றில், கல்லணையைக் கட்டிய மாமன்னன் கரிகாலனின் வாழ்வை பற்றிய கதை தான் 'கரிகாலன்'. இயக்குனர் ஷங்கரிடம், கிராஃபிக்ஸ் உதவியாளராக பல படங்களுக்கு பணிபுரிந்த கண்ணன் இப்படத்தை இயக்கி வருகிறார். 'தெய்வத்திருமகள்' படத்தில் வரும் 'ஒரே ஒரு ஊருக்குள்ள ஒரே ஒரு ராஜாவாம்..' பாடலில் இருந்த கிராஃபிக்ஸ் காட்சிகளை வடிவமைத்துக் கொடுத்தது இவர் தானாம்.

'கரிகாலன்' படத்தில் முதல் நாயகி பிரபல பாலிவுட் நாயகி  ஷெரின் கான்.

மற்றொரு நாயகி ராதிகா ஆப்டே. இவர், ராம்கோபால் வர்மாவின் 'ரத்தச் சரித்திரம்' டப்பிங் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமானவர்.

மூன்றாவது நாயகி மித்ரா குரியன். விஜய் நடித்த 'காவலன்' படத்தில், அசினின் தோழியாக நடித்தவர். தற்போது இரண்டு தமிழ் படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு