Published:Updated:

கொரியாவில் பார்த்திபன் படம் !

கொரியாவில் பார்த்திபன் படம் !

இயக்குநர் பார்த்திபன் ஹீரோவாக நடித்துள்ள படம் 'உள் விலாசம்'. மாதவ் ராமதாசன் இயக்கியுள்ளார்.

கொரியாவில் ஆண்டுதோறும் பூசோன் நகரில் சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. இந்த விழாவில் சிறப்புத் திரையிடலுக்கு இந்தப் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 'எ விண்டோ ஆன் ஆசியன் சினிமா' என்ற பிரிவில் 'உள் விலாசம்'  படம் திரையிடப்படுகிறது.

உலகம் முழுவதுமிருந்து வரும் திரைப்பட கலைஞர்கள் இந்தப் படத்தை பார்வையிட இருக்கிறார்கள்.

போன வருடம் இதே திரைப்பட விழாவில் தான் ரஜினி நடித்த 'எந்திரன்' படமும் திரையிடப்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு