Published:Updated:

எல்லை கடந்த நடிப்பு : வித்யா பாலன்

நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கையை இந்தியில் 'தி டர்ட்டி பிக்சர்' என்ற பெயரில் படமாக்கி வருகிறார்கள். வித்யா பாலன் சில்க் ஸ்மிதா வேடத்தில் நடித்து வருகிறார்.

சில்க் ஸ்மிதாவின் சினிமா வாழ்க்கை, காதல் தோல்வி, தற்கொலை செய்து கொண்டது போன்ற உண்மை சம்பவங்கள் அனைத்தையும் படமாக்கி இருக்கிறார்கள்.

இப்படம் குறித்து வித்யா பாலன், " சினிமாவில் நடிக்க நான் ஏற்கனவே சில கட்டுப்பாடுகள் வைத்திருந்தேன். கவர்ச்சிக்கும் ஒரு எல்லை வைத்திருந்தேன். ஆனால் 'தி டர்ட்டி பிக்சர்' படத்தில் எனது வரைமுறைகளை நானே கடந்து விட்டேன். சில்க் ஸ்மிதா வேடத்தில் நடித்ததால் கதைக்கு அளவுக்கதிகமான கவர்ச்சி தேவைப்பட்டது. எனவே மறுப்பு ஏதும் கூறவில்லை.

படத்திற்காக முத்த காட்சியிலும் நடித்து இருக்கிறேன். சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை இந்த படம் பதிவு செய்வதால் அவரைப்பற்றி முழுமையாக படித்து அறிந்து இந்த படத்தில் நடித்துள்ளேன். சில்க் ஸ்மிதா பிறந்த நாளான டிசம்பர் 2-ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. " என்று கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு