Published:Updated:

சென்னையில் 'ஏழாம் அறிவு' ஆடியோ ரிலீஸ் !

சூர்யா நடிப்பில் தீபாவளியன்று வெளியாக இருக்கும் திரைப்படம் 'ஏழாம் அறிவு'.  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கிறார். உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா முதலில் சிங்கப்பூரில் செப்டம்பர் 10ம் தேதி நடைபெறும் என தகவல்கள் வெளியாகின. பின்னர்  இன்னும் பணிகள் பாக்கி இருப்பதால் செப்டம்பர் 22ம் தேதி மலேசியாவில் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் 'ஏழாம் அறிவு' படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 22ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது.

படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் இணையத்தில் " செப்டம்பர் 22ம் தேதி ஏழாம் அறிவு படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற இருக்கிறது " என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு