Published:Updated:

கௌதம் மேனன் இயக்கத்தில் சந்தானம் !

Vikatan Correspondent

ஜீவா, சமந்தா நடிக்கும் 'நீதானே என் பொன்வசந்தம்' என்னும் படத்தினை இயக்கி வருகிறார் கெளதம் வாசுதேவ் மேனன்.

இப்படத்தின் போஸ்டர்கள் மக்களிடையே வரவேற்பை பெற்று இருந்தாலும், யார் இசையமைக்கிறார், யார் ஒளிப்பதிவாளர் என எதுவும் அந்த போஸ்டர்களில் தெரிவிக்கப்படவில்லை.

இப்படத்திற்காக சந்தானத்தை ஒப்பந்தம் செய்து இருக்கிறார் கெளதம். இப்படத்தில் சந்தானத்திற்கு ஒரு முக்கியமான கதாபாத்திரமாம். இவர்கள் இருவரும் இணையும் முதல் படம் இது.

இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக எம்.எஸ்.பிரபு, எடிட்டிங் ஆண்டனி, உடை வடிவமைப்பாளராக நளினி ஸ்ரீராம் ஆகியோரை ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள்.

இந்நிலையில் த்ரிஷா மற்றும் புதுமுகங்களை வைத்து ஆரம்பித்த 'சென்னையில் ஒரு மழைக்காலம்' படத்தினை தான் 'நீதானே என் பொன்வசந்தம்' என பெயரை மாற்றி ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வலம் வர ஆரம்பித்துள்ளன.