Published:Updated:

போட்டோ விவகாரம் : பதறும் காஜல் !

சமீபத்தில் வெளியான FHM பத்திரிக்கைக்கு டாப்லெஸ் போஸ் கொடுத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார் காஜல் அகர்வால்.

இது குறித்து காஜல் அகர்வால் கூறியுள்ளது " நான் பத்திரிக்கைக்கு அந்த மாதிரி போஸ் எதுவும் கொடுக்கவில்லை. அவர்களே என்  போட்டோவை அப்படி மாதிரி மாற்றி இருக்கிறார்கள்.

அவர்கள் எனக்கு அனுப்பிய புகைப்படங்கள் என்னிடம் உள்ளன. அதில் எதிலுமே அந்த மாதிரி  புகைப்படம் இல்லை. " என்று தெரிவித்துள்ளார்.

FHM பத்திரிக்கையின் ஆசிரியர் கபீர் ஷர்மா " எங்கள் பத்திரிக்கையில் வரும் பிரபலங்களின் புகைப்படங்கள் எதையும் நாங்கள் மாற்ற மாட்டோம். அப்படியே தான் வெளியிடுவோம். காஜல் அகர்வால் இவ்வாறு கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

ஆகஸ்ட் 18-ம் தேதி அந்த போட்டோ ஷூட் நடந்தது.

தேவைப்பட்டால் அனைத்து புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிடுவோம் " என்று தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகர்களுடன் நாயகியாக நடித்து வருவதால் இந்த பிரச்னையால் தனது திரையுலக வாழ்க்கை பாதிக்குமோ என அச்சத்தில் இருக்கிறார் காஜல்.