Published:Updated:

சிம்புவுடன் ஆட மல்லிகா ஷெராவத் !

சிம்புவுடன் ஆட மல்லிகா ஷெராவத் !

இந்தியில் வெளியான 'டபாங்' பட தமிழ் ரீமேக்கான 'ஒஸ்தி' படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. 'டபாங்' படத்தில் இடம்பெற்ற 'முன்னி..' என்ற பாடலில் மல்லிகா அரோரா ஆடி இருப்பார். இந்தி பட ரசிகர்களிடையே  மிகவும் பிரபலமான பாடல் அது.

தமிழில் அப்பாடலில் சிம்பு மற்றும் சோனுவுடன் ஆடுவது யார் என்ற கேள்வி எழுந்தது. நயன்தாரா மற்றும் ஸ்ரேயாவை தயாரிப்பு தரப்பு அணுகி இருப்பதாக முதலில் தகவல்கள் வெளியாகின.

பின்னர், இப்பாடலுக்கு கேத்ரினா கைஃப், தீபிகா படுகோன் போன்ற இந்தி திரையுலக நாயகிகளே ஆடினால் நன்றாக இருக்கும் என்று கருதி சிம்பு மற்றும் தரணி இருவரும் அவர்களை அணுகி இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் தற்போது இந்தி திரையுலகில் கவர்ச்சியில் கலக்கும் மல்லிகா ஷெராவத்தை ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள். 'ஒஸ்தி' படத்தில் சிம்பு, சோனுவுடன் குத்தாட்டம் போட விரைவில் ஹைதராபாத்திற்கு வர இருக்கிறார் மல்லிகா.

இது குறித்து சிம்பு " மல்லிகா ஷெராவத்தை 'முன்னி' பாடலுக்கு ஆடுவதற்கு ஒப்பந்தம் செய்து இருக்கிறோம். ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் இப்பாடலை இம்மாத இறுதியில் படமாக்க இருக்கிறோம். 'ஒஸ்தி' கண்டிப்பாக தீபாவளி வெளியீடாக இருக்கும் " என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு