Published:Updated:

மூன்று ஹீரோக்கள் - ஒரே ஹீரோயின் !

மூன்று ஹீரோக்கள் - ஒரே ஹீரோயின் !

ஜீவா, சமந்தா நடிப்பில் 'நீதானே என் பொன்வசந்தம்' என்னும் படத்தினை இயக்கி வருகிறார் கெளதம் வாசுதேவ் மேனன். இப்படத்தினை R.S.Infotainment நிறுவனமும், PHOTON KATHAAS நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது.

எதிலும் கொஞ்சம் புதுமையை விரும்புபவர் கெளதம். 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இரு வெவ்வேறு நாயகன்/நாயகிகளை வைத்து தனித்தனியாக வெளியிட்டார். அதனை அடுத்து இயக்கிய 'நடுநிசி நாய்கள்' படத்தில் பின்னணி இசையே இல்லாமல் உண்மையான ஒலிகளையே படம் முழுவதும் பின்னணி இசையாகவே பயன்படுத்தி காட்டினார்.

இதனை தொடர்ந்து 'நீதானே என் பொன்வசந்தம்' படத்தினை மூன்று மொழிகளில் இயக்கி வருகிறார் கௌதம் மேனன். தமிழில் ஜீவா, தெலுங்கில் ராம், இந்தியில் ஆதித்யா ராய் கபூர் என  மூன்று மொழிகளிலும் கதாநாயகன் வெவ்வேறாக இருந்தாலும்,  மூன்றிலுமே நாயகி சமந்தா தான்.

இதனால் ஒவ்வொரு காட்சியையும் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று முறை காட்சிப்படுத்தி வருகிறார் ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.பிரபு.

சென்னையைச் சுற்றியுள்ள இடங்களில் தற்போது படமாக்கி வருகிறார்கள். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு