Published:Updated:

'கோ' - பார்ட் 2 !

'கோ' - பார்ட் 2 !

ஜீவா, கார்த்திகா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்த படம் 'கோ'. R.S.Infotainment தயாரிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்தார்.

பத்திரிகை உலகை மையப்படுத்தி, அதில் இருக்கும் சுவராசியங்களை வைத்து திரைக்கதை அமைத்து இருந்தார் கே.வி.ஆனந்த். இப்படம் வெளிவந்து சினிமா விமர்சகர்கள் மத்தியிலும், தமிழக மக்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றது.  தெலுங்கில் டப்பிங் செய்யப்படு 'ரங்கம்' என்ற பெயரில் வெளிவந்து அங்கும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் 'கோ' படத்தின் இணை தயாரிப்பாளரான ஜேம்ஸ், 'கோ' படத்தின் இரண்டாம் பாகத்தில் நாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தினை பற்றிய மற்ற தகவல்கள் எதுவும் இன்னும் வெளிவரவில்லை.

'கோ' படத்தின் இயக்குனரான கே.வி.ஆனந்த் தற்போது சூர்யா நடிப்பில் 'மாற்றான்' படத்தினை இயக்கி வருகிறார். 'மாற்றான்' படத்தின் பணிகளை  முடித்துவிட்டு இப்படத்தினை இயக்குவாரா என்பது குறித்த தகவல்கள் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு