கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்க பூஜை போடப்பட்ட படம் 'ராணா'. பூஜை நடைபெற்ற அன்றே ரஜினிகாந்திற்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் சென்னை இசபெல்லா, மற்றும் போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் சுமார் ஒரு மாத காலம் சிகிச்சை பெற்றார்.

மேலும் சிங்கப்பூர் சென்று 45 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றார். உடல்நலம் தேறியுள்ள ரஜினி தற்பொழுது முழு ஓய்வில் இருந்து வருகிறார்.

'ராணா' படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்பது குறித்து பல்வேறு செய்திகள் வலம் வர ஆரம்பித்தன.

இந்நிலையில் இப்படத்தின் இணை தயாரிப்பாளர் முரளி மனோகர் " ராணா படத்தின் வேலைகள் மும்முரமாக நடந்துவருகிறது. படத்திற்கு  கவிஞர் வைரமுத்து மூன்று பாடல்கள் எழுதியுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து அப்பாடல்கள் தயாராகிவிட்டன. ரஜினியின் உடல் நலன் கருதி, கதையில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கும். இதற்காக ரஜினி தயாராகிவருகிறார். அவர் சின்ன, சின்ன உடற்பயிற்சிகள் செய்துவருகிறார்” என்று கூறியுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு