Published:Updated:

'மகாபாரதம்' சீரியல் நடிகையை மணக்கிறார் ‘அபியும் நானும்’ கதாநாயகன்!

Vikatan Correspondent
'மகாபாரதம்' சீரியல் நடிகையை மணக்கிறார் ‘அபியும் நானும்’ கதாநாயகன்!
'மகாபாரதம்' சீரியல் நடிகையை மணக்கிறார் ‘அபியும் நானும்’ கதாநாயகன்!
'மகாபாரதம்' சீரியல் நடிகையை மணக்கிறார் ‘அபியும் நானும்’ கதாநாயகன்!

சென்னை: 'மகாபாரதம்' சீரியலில் நடித்துள்ள நடிகை நிஷாவை காதல் திருமணம் செய்கிறார் ‘அபியும் நானும்’ படத்தில் கதாநாயகனாக நடித்த நடிகர் கணேஷ் வெங்கட் ராமன்.

‘அபியும் நானும்’ படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு கதாநாயகனாக அறிமுகமான கணேஷ் வெங்கட் ராமன், கமல்ஹாசன் நடித்த என்னை போல் ஒருவன், சுந்தர் சி. இயக்கிய தீயா வேலை செய்யனும் குமாரு, விக்ரம் பிரபு நடித்த ‘இவன் வேற மாதிரி’ படத்திலும் நடித்திருக்கிறார்.

இப்போது ‘தனி ஒருவன்’, ‘அச்சாரம்’ உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். இவருக்கும், ‘மகாபாரதம்’ புகழ் டி.வி. நடிகை நிஷாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்கள். இவர்கள் காதலை பெற்றோர்களும் ஏற்றுக்கொண்டார்கள்.

அதைத் தொடர்ந்து கணேஷ் வெங்கட் ராமனுக்கும், நிஷாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நேற்று மாலை நடந்தது. தாம்பரத்தில் உள்ள நிஷாவின் உறவினர் ஒருவர் வீட்டில் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டனர். இவர்களது திருமணம் சென்னையில் நவம்பர் 22ஆம் தேதி நடக்கிறது.

திருமணம் குறித்து கணேஷ் வெங்கட் ராமன் கூறுகையில், "எனக்கு பொருத்தமான ஒரு பெண்ணை ரொம்ப காலமாக நான் தேடிக்கொண்டிருந்தேன். அந்த பெண்ணுக்காக நான் காத்திருந்தேன். நிஷாவை ஒரு டெலிவிஷன் நிகழ்ச்சியில் சந்தித்தேன். அப்போது எங்கள் இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. அவரிடம் பேசி பழகியதில், நமக்கு பொருத்தமான பெண் இவர்தான் என்பதை முடிவு செய்தேன். நான் எதிர்பார்த்த அம்சங்கள் நிஷாவிடம் நிறைய இருந்தது. பெற்றோர்கள் சம்மதத்துடன் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்கிறோம்" என்றார்.