Published:Updated:

'மேற்குத்தொடர்ச்சி மலை' படப்பிடிப்பு தளத்தில் இளையராஜா! ((படங்கள்)

விகடன் விமர்சனக்குழு
'மேற்குத்தொடர்ச்சி மலை' படப்பிடிப்பு தளத்தில் இளையராஜா! ((படங்கள்)
'மேற்குத்தொடர்ச்சி மலை' படப்பிடிப்பு தளத்தில் இளையராஜா! ((படங்கள்)

தேனி: சொந்த ஊரில் நடந்து வரும் "மேற்குத் தொடர்ச்சி மலை" படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார் இசைஞானி இளையராஜா.
 

'மேற்குத்தொடர்ச்சி மலை' படப்பிடிப்பு தளத்தில் இளையராஜா! ((படங்கள்)

தன் வித்தியாசமான நடிப்பின் மூலம் சினிமாவில் முத்திரைப்பதித்துக் கொண்டு இருக்கும் நடிகர் விஜயசேதுபதி, தன் நண்பர்களுக்காக தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கும் படம் "மேற்குத் தொடர்ச்சிமலை".
 

'மேற்குத்தொடர்ச்சி மலை' படப்பிடிப்பு தளத்தில் இளையராஜா! ((படங்கள்)

இந்த படத்தின் படப்பிடிப்பு தேனி, போடிமெட்டு, பண்ணைப்புரம் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்படத்தை "ஆதலால் காதல் செய்வீர்" பட கதை, வசனகர்த்தாவும், அறிமுக இயக்குநருமான லெனின் பாரதி இயக்குகிறார். இப்படத்தின் இசையினை தேனி மண்ணின் மைந்தரான இசைஞானி இளையராஜாவும், ஒளிப்பதிவை அதே மண்ணை சேர்ந்த  "அழகர்சாமியின் குதிரை" பட ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரும் ஏற்றிருக்கின்றனர்.
 

'மேற்குத்தொடர்ச்சி மலை' படப்பிடிப்பு தளத்தில் இளையராஜா! ((படங்கள்)

மேலும் இப்படத்தில், எடிட்டிங்கை மு.காசி விஸ்வநாதனும், ஆர்ட்டினை கலை இயக்குநர் ராஜீவனின் உதவியாளர் ஜெய்யும் கவனித்து வருகின்றனர்.

தொடர்ச்சியாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு, தன் சொந்த ஊரான பண்ணைப்புரம் பகுதிகளில் எடுத்துவருவதை அறிந்த இசைஞானி இளையராஜா, யாரும் எதிர்பாராதவிதமாக மேற்குத்தொடர்ச்சிமலைப் படப்பிடிப்பினை  வந்து பார்த்து, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டுச் சென்றிருக்கும் நெகிழ்வான நிகழ்ச்சி நடந்து இருக்கிறது.
 

'மேற்குத்தொடர்ச்சி மலை' படப்பிடிப்பு தளத்தில் இளையராஜா! ((படங்கள்)

இந்நிகழ்வு குறித்து அப்படத்தின் இயக்குநர் லெனின்பாரதி கூறுகையில், "இப்படத்திற்கு இசைஞானியிடம் இருந்து, இப்படி ஒரு எதிர்பாராத வாழ்த்தினை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அவருக்கு இப்படக்குழுவினர் மிக்க நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். இப்படம் மலைப்பகுதியில் வசிக்கும் எளிய மனிதர்களின் வாழ்க்கையையும், சுற்றியுள்ள சமூகத்தின் நுண் அரசியலையும் சுட்டிக்காட்டும் படமாக அமையும்"என்றார்.

-ம.மாரிமுத்து (மாணவப் பத்திரிகையாளர்)

படங்கள்:
வீ.சக்தி அருணகிரி