Published:Updated:

நான் ஆட மாட்டேன்! : ஷன்சிகா

விக்ரம், தீக்ஷா சேத் நடித்து வரும் படம் 'ராஜபாட்டை'. சுசீந்திரன் இயக்கி வருகிறார்.

இப்படத்தில் விக்ரமிற்கு அசத்தலாக ஒரு குத்து பாடல் ஒன்று இருக்கிறதாம். இதுவரை குத்து பாடலுக்கு ஆடாத ஒருவரை இப்பாடலுக்கு ஆட வைக்க வேண்டும் என்று முடிவு செய்தார்களாம்.

இதற்காக ஹன்சிகாவை அணுகி  ஆட பெரிய தொகை தருவதாக கேட்டார்களாம். அவரோ  எவ்வளவு பணம் கொடுத்தாலும் இந்த மாதிரி பாடலுக்கு எல்லாம் ஆட மாட்டேன் என்று கறாராக மறுத்து விட்டாராம்.

இது குறித்து ஹன்சிகா கூறியிருப்பது " நான் பணத்திற்காக நடிக்க வரவில்லை. எனது திரையுலக வாழ்வில் எவ்வளவு பணம் கொடுத்தாலும் நான் நாயகியகாக நடிக்காத படங்களில் 'ஒரு பாடல்' ஆட்டத்துக்கு சம்மதிக்க மாட்டேன்." என்று கூறி இருக்கிறார்.