Published:Updated:

ஆஸ்காருக்கு 'ஆதாமிண்டே மகன் அபு'

ஆஸ்கார் விருதுக்கு ஒவ்வொரு ஆண்டும் இந்தியா சார்பில் படங்களை தேர்வு செய்து அனுப்பி வைப்பார்கள். அந்த வரிசையில் இந்த ஆண்டு மலையாள படமான 'ஆதாமிண்டே மகன் அபு' என்ற திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

2010ம் ஆண்டுக்கான ஆஸ்கார் போட்டிக்கான  படத்தை தேர்வு செய்ய இந்திய திரைப்பட சம்மேளனம் 14 பேர் கொண்ட குழுவை அமைத்தது. தமிழில் 'தெய்வத்திருமகள்', 'ஆடுகளம்', 'முரண்', 'கோ', 'எந்திரன்' ஆகிய படங்களும் இந்தியில் Guzaarish, No One Killed Jessica, Dhobi Ghat, Chillar Party, 7Khoon Maaf ஆகிய படங்களும், மலையாளத்தில் பல்வேறு படங்களையும் பார்த்தார்கள்.

அவற்றில் இருந்து 'ஆதாமிண்டே மகன் அபு' என்ற மலையாள படத்தினை ஆஸ்கார் விருதுக்கு அனுப்புவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

'ஆதாமிண்டே மகன் அபு' படத்தின் இயக்குனர் சலீம் அகமது.  இப்படம் இந்த ஆண்டு 4 தேசிய விருதுகளை அள்ளியது.

இப்படத்தில் கதாநாயகனாக நடித்த சலீம் குமாருக்கு இந்த ஆண்டு  சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கு மீண்டும் ஆஸ்கார் கிடைக்குமா..?

அடுத்த கட்டுரைக்கு