Published:Updated:

தனுஷைக் காக்க வைக்கும் நஸ்ரியா!

Vikatan Correspondent
தனுஷைக் காக்க வைக்கும் நஸ்ரியா!

தஞ்சாவூரில் நடைபெற்ற வந்த 'நையாண்டி' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவுற்று இருக்கிறது. ஆனால் 30 நாட்கள் படப்பிடிப்பு என்று சென்றவர்கள் பாதியிலேயே திரும்பி இருக்கிறார்கள்.

தனுஷ், நஸ்ரியா மற்றும் பலர் நடிக்க, 'களவாணி' சற்குணம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'நையாண்டி'. நீண்ட நாட்கள் கழித்து தனுஷ் நடிக்கும் காமெடி கதை என்பதால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

ஏன் பாதியிலேயே திரும்பி இருக்கிறார்கள்? என்று விசாரித்தால், நாயகி நஸ்ரியா தான் காரணமாம். படப்பிடிப்பு துவங்கி, இரண்டு நாட்கள் மட்டுமே கலந்து கொண்டாராம் நஸ்ரியா. பின்பு "எனக்கு +2 தேர்வு இருக்கிறது. ஆகையால் ஏப்ரலில் இருந்து படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன்" என்று கூறிவிட்டு சென்று விட்டாராம்.

'Yuvvh' என்ற மலையாள ஆல்பம் மூலம் புகழ் பெற்றவர் என்பதால், கால்ஷுட் தேதிகள் ஒதுக்க முடியாத அளவிற்கு மலையாள, தமிழ் படங்களில் நடித்து வருகிறார் நஸ்ரியா. தமிழில் 'நேரம்', 'நையாண்டி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் 'நேரம்' படம் தான் முதலில் வெளிவர இருக்கிறது.

நஸ்ரியா கால்ஷுட் தேதிகளுக்காக தனுஷ் உள்ளிட்ட 'நையாண்டி' படக்குழு காத்துக் கொண்டிருக்கிறார்கள். சேச்சி எப்போ தேதிகள் ஒதுக்குமோ?