Published:Updated:

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் கெளதம்!

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் கெளதம்!

மிகுந்த எதிர்ப்பார்ப்பு உடன் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி பெட்டிக்குள் சுருண்ட படம் 'கடல்'. கெளதம் கார்த்திக், துளசி, அர்ஜுன், அரவிந்த்சாமி மற்றும் பலர் நடித்து இருந்தார்கள்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல் பெரும் வரவேற்பு பெற்றாலும், படம், ரசிகர்களுக்கு  பெருந்த ஏமாற்றத்தை அளித்தது.

கெளதம் கார்த்திக் நடித்த முதல் படம் சரியாக போகவில்லை என்றாலும், வாய்ப்புகள் அவரது வீட்டை தட்டிக் கொண்டே இருக்கிறதாம். இதுவரை 25க்கும் மேற்பட்ட கதைகளை கேட்டு விட்டாராம் கெளதம்.

'கடல்' படத்தினைத் தொடர்ந்து 'சிலம்பாட்டம்' படத்தினை இயக்கிய சரவணன் இயக்க இருக்கும் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் கெளதம் கார்த்திக். அப்படத்தினைத் தொடர்ந்து ஐஸ்வர்யா தனுஷ் இயக்க இருக்கும் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறாராம்.

'3' படத்தினை இயக்கிய ஐஸ்வர்யா தனுஷ், அடுத்த படத்திற்கான கதையினை தயார் செய்து வருகிறாராம். சமீபத்தில் கெளதம் கார்த்திக்கை நேரில் சந்தித்து பேசியிருக்கிறாராம்.

'3' படத்தில் WHY THIS KOLAVERI பாடல் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு பெற்றது. அதுபோலவே இப்படத்தின் பாடல்களும் அமைய வேண்டும் என்று கருதி அனிருத் இசையமைக்க ஒப்பந்தம் செய்து இருக்கிறார். நாயகி தேடும் படலம் நடைபெற்று வருகிறதாம்.

விரைவில் ரஜினி மகள் இயக்கத்தில், கார்த்திக் மகன் நடிக்க இருக்கிறார் என்கிறது கோலிவுட்!

படம் : கே.ராஜசேகரன்