Published:Updated:

மீண்டும் இணையும் 'தல' கூட்டணி!

விகடன் விமர்சனக்குழு
மீண்டும் இணையும் 'தல' கூட்டணி!
மீண்டும் இணையும் 'தல' கூட்டணி!
மீண்டும் இணையும் 'தல' கூட்டணி!

அஜீத் - ஏ.ஆர்.முருகதாஸ் இணைப்பில் வெளியான படம் தீனா. அப்படம் வெளியானது முதல் அஜீத்தை அனைவரும் தல என்று அழைக்க ஆரம்பித்தார்கள். பெரும் வரவேற்பை பெற்றதை மட்டுமல்லாது, ஏ.ஆர்.முருகதாஸை முன்னணி இயக்குனராக்கியது.

தமிழ் திரையுலகிலின் தற்போதைய லேட்டஸ்ட் டாக் என்னவென்றால் அஜீத் - ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் இணைகிறார்கள் என்பது தான். முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஒன்று அஜீத் - ஏ.ஆர்.முருகதாஸ் ஆகிய இருவரிடமும் பேசி அட்வான்ஸ் தொகையையும் கொடுத்து விட்டதாம்.

துப்பாக்கி வெற்றிக்கு பிறகு அஜீத்துடன் ஏ.ஆர்.முருகதாஸ் இணைவதால் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. அதுமட்டுமன்றி படத்திற்கு ரெட்டை தல என்று பெயரிட்டு இருக்கிறார்களாம். அஜீத் இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறாராம்.

தற்போது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடித்து வரும் அஜீத், அதனைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த இரண்டு படங்களையும் முடித்து விட்டு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பார் அஜீத் என்று பேச்சு நிலவுகிறது.

விரைவில் இப்படத்திற்கான முறையான அறிவிப்பு வரும் என தெரிகிறது.