Published:Updated:

தலைப்பை மாற்றவைத்த பவர் ஸ்டார்!

விகடன் விமர்சனக்குழு
தலைப்பை மாற்றவைத்த பவர் ஸ்டார்!
தலைப்பை மாற்றவைத்த பவர் ஸ்டார்!
தலைப்பை மாற்றவைத்த பவர் ஸ்டார்!

ஆடுகளம் படத்திற்கு பிறகு சிம்பு நடிக்கும் வடசென்னை படத்தினை இயக்க இருப்பதாக வெற்றிமாறன் அறிவித்தார். ஆனால் அப்படம் கைவிடப்பட்டு மீண்டும் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி உறுதியானது.

அப்படத்தினை தயாநிதி அழகிரி தயாரிக்க முன்வந்தார். தனுஷ் மரியான், இந்தியில் ராஜன்ஹா என பிஸியாக இருப்பதால் இன்னும் அப்படம் தொடங்கப்படவில்லை.

இந்நிலையில் வெற்றிமாறன் Grass Root Film Company என்னும் பெயரில் ஒரு புதிய தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளார். அந்நிறுவனம் மூலம் சித்தார்த் நடிக்கும் உதயம் NH4 என்னும் படத்தினை தயாரித்து இருக்கிறார்.

கதை, திரைக்கதையை வெற்றிமாறனே எழுத, படத்தினை அவரது நண்பர் மணிமாறன் இயக்கி இருக்கிறார். முதலில் இப்படம் தேசிய நெடுஞ்சாலை என்று தான் பெயரிடப்பட்டது. ஆனால் பவர் ஸ்டார் சீனிவாசன் ஏற்கனவே அத்தலைப்பை பதிவு செய்து வைத்து இருப்பதால் உதயம் NH4 என்று பெயரினை மாற்றி விட்டார்கள்.

சித்தார்த் இப்படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்து இருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து இருக்கிறார்.

தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாக இருக்கும் படத்தின் படப்பிடிப்பு மே மாதம் துவங்க இருக்கிறதாம்.