Published:Updated:

த்ரிஷா சினிமாவுக்கு முழுக்கா?

த்ரிஷா சினிமாவுக்கு முழுக்கா?
த்ரிஷா சினிமாவுக்கு முழுக்கா?
த்ரிஷா சினிமாவுக்கு முழுக்கா?

சென்னை: நடிகை த்ரிஷா சினிமாவுக்கு முழுக்கு போடப்போவதாக வெளியான தகவலை அவரது தாயார் மறுத்துள்ளார்.

நடிகை த்ரிஷா இந்த ஆண்டு இறுதியில் சினிமாவுக்கு முழுக்குப் போட இருப்பதாகவும், அவருக்குத் திருமனம் செய்து வைப்பதற்காக த்ரிஷாவின் அம்மா, உறவில் மாப்பிள்ளை பார்த்து வருவதாகவும் ஒரு இன்று காலை ஒரு தகவல் வெளியானது.

இதுபற்றி த்ரிஷாவின் அம்மா உமாவிடம் பேசினோம். ''இந்தத் தகவல் பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. இது ஒரு அப்பட்டமான வதந்தி. இதில் துளியும் உண்மை கிடையாது.

அப்படி எந்த எண்ணமும் த்ரிஷாவுக்கு இல்லை. அவள் கைவசம் நிறைய படங்கள் இருக்கின்றன. இன்னும் பலர் கால்ஷீட் கேட்டுக்கொண்டு இருக்கின்றனர்.

அவளுக்குத் திருமணம் செய்து வைக்கும் வயதில் உறவில் மாப்பிள்ளையும் கிடையாது. நானும் திருமண ஏற்பாடுகள் எதையும் இன்னும் தொடங்கவில்லை" என்றார்.