Published:Updated:

பண மோசடி: பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரண்ட்!

பண மோசடி: பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரண்ட்!
பண மோசடி: பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரண்ட்!
பண மோசடி: பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரண்ட்!

நாமக்கல்: நிலம் வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

நாமக்கல்லைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பவரிடம் நிலம் தருவதாக, பவர் ஸ்டார் ரூ 2 லட்சம் முன்தொகை வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் சொன்னபடி நிலம் எதுவும் கிரயம் செய்து கொடுக்கவில்லையாம்.

இதனால் வெங்கடாசலம் தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட போது, பவர் ஸ்டார். காசோலை ஒன்றை கொடுத்துள்ளார். இந்த காசோலை வங்கியில் பணம் இல்லாமல் திரும்பிவிட்டதாம்.

 

இதனையடுத்து பவர் ஸ்டார் மீது நீதிமன்றத்தில் பண மோசடி மற்றும் செக் மோசடி வழக்குத் தொடர்ந்தார் வெங்கடாசலம்.

இந்த வழக்கு நாமக்கல் குற்றவியல் முதன்மை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பவர் ஸ்டார்   சீனிவாசனுக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.