Published:Updated:

புதுமுகங்களுக்கு ஆதரவு : உதயநிதி

புதுமுகங்களுக்கு ஆதரவு : உதயநிதி

புதுமுகங்களுக்கு ஆதரவு : உதயநிதி

புதுமுகங்களுக்கு ஆதரவு : உதயநிதி

Published:Updated:

'ஆதவன்', 'மன்மதன் அம்பு' போன்ற பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்தவர் உதயநிதி ஸ்டாலின். தற்போது சூர்யா நடிக்கும் 'ஏழாம் அறிவு' படத்தை தயாரித்து இருக்கிறார்.

இவரது அடுத்த தயாரிப்பு என்ன என்று எதிர்ப்பார்ப்பு நிலவி வரும் நிலையில், 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தின் இயக்குனர் சீனு ராமசாமியின்  அடுத்த படத்தினை தயாரிக்க இருக்கிறார் உதயநிதி.

சீனு ராமசாமி இவரிடம் 3 கதைகளை கூறி இருக்கிறாராம். அவற்றில் ஏதாவது ஒரு கதையை தயாரிப்பது என்று முடிவு எடுத்து இருக்கிறார்கள். இப்படத்தில் புதுமுகங்கள் பலர் நடிக்க இருக்கிறார்களாம்.

இனிமேல் பெரிய நாயகர்கள் படத்தினை தயாரிக்காமல் புது முகங்கள் நடிக்கும் படங்களை தயாரிப்பது என்று முடிவு எடுத்து இருக்கிறாராம்  உதயநிதி ஸ்டாலின்.