Published:Updated:

விஜய் விருதுகள் - விரிவான பார்வை!

விஜய் விருதுகள் - விரிவான பார்வை!
விஜய் விருதுகள் - விரிவான பார்வை!

விஜய் விருதுகள் - விரிவான பார்வை!

விஜய் விருதுகள் - விரிவான பார்வை!

2012ம் ஆண்டிற்கான விஜய் அவார்ட்ஸ் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் சனிக்கிழமை இரவு கோலகலமாக நடைபெற்றது. கமல், ஷாருக்கான், விஜய், சமந்தா, சித்தார்த், மாதவன் என பல்வேறு நட்சத்திரங்கள் இவ்விழாவில் கலந்து கொண்டார்கள்.

விழாவில் கொடுக்கப்பட்ட விருதுகள் :

சிறந்த உடை அலங்காரம் - அரவான்
சிறந்த கலை இயக்குனர் - அரவான்
சிறந்த ஒளிப்பதிவாளர் - கோபி அமர்நாத் (பீட்சா)
சிறந்த சண்டைப் பயிற்சி - அனல் அரசு (தடையறத் தாக்க)
சிறப்பு ஜுரி விருது - ஆரோகணம்
சிறந்த பாடலாசிரியர் - தாமரை (கண்கள் நீயே - முப்பொழுதும் உன் கற்பனைகள்)
சிறந்த பின்னணிப் பாடகர் - ரம்யா ( சற்று முன் - நீதானே என் பொன்வசந்தம்)
சிறந்த நடன இயக்குனர் - ராபாட் (லவ் பண்ணலாமா - போடா போடி)
சிறந்த புதுமுக இயக்குனர் - பாலாஜி தரணீதரன் (நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்)
சிறந்த உறுதுணை நடிகர் - சத்யராஜ் (நண்பன்)
சிறந்த உறுதுணை நடிகை - அனுபமா குமார் ( முப்பொழுதும் உன் கற்பனைகள்)
சிறந்த நகைச்சுவை நடிகர் - சந்தானம் ( ஒரு கல் ஒரு கண்ணாடி)
சிறந்த இசையமைப்பாளர் - இமான் ( கும்கி)
சிறந்த வில்லன் நடிகர் - சுதீப் ( நான் ஈ)
சிறந்த திரைக்கதை - கார்த்திக் சுப்புராஜ் (பீட்சா)
சிறந்த வசனம் - ராஜேஷ் ( ஒரு கல் ஒரு கண்ணாடி)
சிறந்த இயக்குனர் - பாலாஜி சக்திவேல் ( வழக்கு எண் 18/9)
சிறந்த படம் - வழக்கு எண் 18/9
சிறந்த புதுமுக நடிகை - வரலட்சுமி சரத்குமார் ( போடா போடி)
சிறந்த புதுமுக நடிகர் - விக்ரம் பிரபு (கும்கி)
BEST FIND OF THE YEAR - அனிருத்
BEST FACE OF THE YEAR selected by fans  - உதயநிதி ஸ்டாலின்
சிறந்த நடிகை - சமந்தா (நீதானே என் பொன்வசந்தம்)
சிறந்த நடிகர் - தனுஷ் (3)
சிறந்த பொழுதுபோக்கு நடிகர் - விஜய் (நண்பன் & துப்பாக்கி)
சிறப்பு ஜுரி விருது - விஜய் சேதுபதி
சிவாஜி கணேசன் விருது - ஷாருக்கான்
சிறந்த படக்குழு - பீட்சா
ரசிகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த பாடல் -  கூகுள் கூகுள் (துப்பாக்கி)

விஜய் விருதுகள் - விரிவான பார்வை!

ரசிகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த இயக்குனர் -  ஏ.ஆர்.முருகதாஸ் (துப்பாக்கி)
ரசிகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த படம்  -  துப்பாக்கி
ரசிகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த நடிகர் - விஜய் (துப்பாக்கி)

சில தகவல்கள் :

* கோபிநாத்துடன் இணைந்து மாதவன்  நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.

* சிறந்த புதுமுக இயக்குனருக்கான விருது பாலாஜிக்கு வழங்கப்பட்டது. உடனே தொகுப்பாளர் கோபிநாத் "உங்கள் படத்தின் புகழ்பெற்ற வசனத்தினை நீங்கள் பேச வேண்டும்" என்று வேண்டுகோள் விடுக்க.. பாலாஜியும் பேசினார். அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதியை பேச சொன்னார்கள். அவரும் பேச பயங்கர கைத்தட்டல்கள் கிடைத்தன.

* அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி அருகிலே அமர்ந்து இருந்த நாயகி காயத்ரியை பார்த்து "ப்ப்பா! என்ன பொண்ணுடா இது" என்ற வசனத்தினை பேச சொல்லவே அவரும் பேச, அப்போது கிடைத்த கைத்தட்டல்கள் அடங்க சில நேரம் ஆனது.

* சூது கவ்வும் படத்தின் பாடல்களுக்கு கிளாமராக நடனமாடி அனைவரையும் கவர்ந்தார் வரலட்சுமி சரத்குமார்.

* குறும்படப்  போட்டி ஒன்றை அறிவித்து அதில் வெற்றி பெறுபவர் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் நிறுவனம் மற்றும் விஜய் டிவி இணைந்து தயாரிக்கும் படத்தின் இயக்குனர் ஆகும் வாய்ப்பு என்று அறிவித்தார்கள். அப்போட்டியில் WARRANT என்ற குறும்படத்தினை இயக்கிய மாமுண்டி வெற்றி பெற்று இயக்குனராக அறிமுகமாகிறார்.

* நடிகர் சித்தார்த் மேடையில் தோன்றி காதல் பாடல்களைப்  பாட, அங்கிருந்த திரையில் சமந்தா காட்டிய போது கூட்டத்தினர் பெரும் கூச்சல் எழுப்பினார்கள். அதைப் போலவே சமந்தா சிறந்த நடிகை விருதினை வாங்கிய போது சித்தார்த்தை திரையில் காட்டினார்கள். சித்தார்த், சமந்தா இருவருமே அருஅருகே அமர்ந்து விழாவை ரசித்துப் பார்த்து தங்களது காதலை உறுதிப்படுத்தினார்கள்.

* "எனக்கு விருது கொடுத்து  மட்டுமே பழக்கம், விஜய் அவார்ட்ஸ் எனக்கு விருது வழங்கி இருக்கிறது " என்று சிறந்த பொழுதுபோக்கு நடிகருக்கான விருதினை பெற்றவுடன் கூறினார் விஜய்.

* மாதவன், த்ரிஷா இருவரும் இணைந்து ஷாருக்கானை அழைத்தார்கள். உள்ளே நுழைந்த ஷாருக்கான் கமல்,  விஜய்யிடம் பேசிக்கொண்டு இருந்தார். த்ரிஷா மேடையில் இருந்து இறங்கி ஷாருக்கான் அருகே போய் உட்கார்ந்து கொண்டார்.

* 'விஸ்வரூபம்' படத்துக்கு  நடனம் அமைத்ததிற்காக தேசிய விருது வென்ற பிர்ஜு மகாராஜிற்கு நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தார் கமல்.

* கமல், விஜய், பிரபு, விக்ரம்பிரபு என அனைவரும் இணைந்து ஷாருக்கானுக்கு "செவாலியே சிவாஜி கணேசன் விருது" அளித்தார்கள். அதற்கு முன் ஷாருக்கானை பற்றிய வீடியோ பதிவு ஒன்று திரையிடப்பட்டது.

* " ஹேராம்" படத்தில் நடித்ததிற்காக இதுவரை ஷாருக்கான் என்னிடம் ஒரு பைசா கூட சம்பளமாக வாங்கவில்லை என்று நெகிழ்ந்தார் கமல்.

* " எனக்கு தென்னந்திய திரையுலகம் மிகவும் பிடிக்கும். இங்கிருந்து தான் பல்வேறு புதிய சிந்தனைகளுடன் கூடிய படங்கள் வருகின்றன. நான் கமலிடம், அஜித்திடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். கமலை முதன் முதலில் சந்தித்த உடன் இரவு வீட்டிற்கு சென்று " நான் கமலைத் தொட்டுப் பேசினேன். இப்போது நான் செத்தாலும் கவலைப் பட மாட்டேன் " என்றேன். நான் ஐ.பி.எல்லில் கொல்கத்தா அணிக்கு உரிமையாளராக இருக்கலாம், ஆனால் ஐ.பி.எல்லில் எனக்கு பிடித்த அணி சென்னை சூப்பர் கிங்ஸ் தான். விஜய் என்னை விட நல்ல டான்ஸர் மட்டுமல்ல நல்ல நடிகரும் கூட" என்றார் ஷாருக்கான்.

* ரசிகர்கள் தேர்ந்தெடுத்த அனைத்து விருதுகளுமே 'துப்பாக்கி' படத்திற்குக் கிடைத்தது. சிறந்த பாடல், சிறந்த இயக்குனர், சிறந்த படம், சிறந்த நடிகர் என 4 விருதுகள் கிடைத்தது. அனைத்து விருதுகளையும் ஷாருக்கான் வழங்கினார்.

* இறுதியாக ஷாருக்கானுடன் இணைந்து விஜய் 'கூகுள் கூகுள்' பாடலுக்கு நடனமாடினார்.

அடுத்த கட்டுரைக்கு