Published:Updated:

அஜித், சூர்யாவோடு நடிக்க ஆசை!

Vikatan Correspondent
அஜித், சூர்யாவோடு நடிக்க ஆசை!
அஜித், சூர்யாவோடு நடிக்க ஆசை!
அஜித், சூர்யாவோடு நடிக்க ஆசை!

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருபவர் அமலா பால். தமிழில் விஜய், விக்ரம் ஆகிய நடிகர்களுடன் நடித்து விட்டார். தெலுங்கில் ராம் சரண், அல்லு அர்ஜுன் ஆகியோருடன் நடித்து விட்டார்.

தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் இவர் நடித்து இருக்கும் 'Iddarammayilatho' படம் 30 ம் தேதி வெளிவர இருக்கிறது. தமிழில் விஜய்யுடன் நடித்து இருக்கும் 'தலைவா' படமும் விரைவில் வெளிவர இருக்கிறது.

இந்நிலையில் அடுத்ததாக கதை கேட்டு வரும் அமலா பால், வேறு எந்த ஒரு படத்திலும் ஒப்பந்தம் ஆகவில்லை. தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருவதால், நல்ல மார்க்கெட் இருந்து வருகிறதாம்.

அதுமட்டுமன்றி தமிழில் அஜித், சூர்யா ஆகியோருடன் எப்படியாவது ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்று துடியாய் துடிக்கிறாராம். அவர்களுடன் மட்டும் ஒரு படத்தில் நடித்துவிட்டால், தனக்கு இருக்கும் தற்போதைய மார்க்கெட் நிலைமை அப்படியே மாறிவிடும் என்று நம்புகிறாராம்.

"காற்றுள்ள போதே... தூற்றிக்கொள்!"அப்படின்னு சும்மாவா சொன்னாங்க...?