Published:Updated:

இந்தியில் ரீமேக்காகும் 'நேரம்'

Vikatan Correspondent
இந்தியில் ரீமேக்காகும் 'நேரம்'
இந்தியில் ரீமேக்காகும் 'நேரம்'
இந்தியில் ரீமேக்காகும் 'நேரம்'

தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியான 'நேரம்' திரைப்படம் இரண்டும் மொழிகளிலுமே வரவேற்பை பெற்று இருக்கிறது. விரைவில் இப்படம் இந்தியில் ரீமேக்காக இருப்பது தான் ஹைலைட்.

நிவீன், நஷ்ரியா, தம்பி ராமையா, நாசர், ஜான் விஜய் நடிப்பில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய படம் தான் 'நேரம்'. PISTAH என்ற பாடலை, படம் வெளியாகும் முன்பு YOUTUBE இணையத்தில் வெளியிட்டு படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்படுத்தினார்கள்.

அதுபோலவே படமும் ஏமாற்றாமல் வித்தியாசமாக இருக்கவே மக்களிடையே வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தின் இந்தி ரீமேக்கையும் அல்போன்ஸ் புத்திரன் தான் இயக்க இருக்கிறாராம்.

இது குறித்து இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் " ஆம். 'நேரம்' படத்தினை இந்தியில் ரீமேக் செய்ய இருக்கிறோம். தயாரிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்போம்" என்றார்.