Published:Updated:

விஜய் பிறந்தநாள் விழா ரத்து!

Vikatan Correspondent
விஜய் பிறந்தநாள் விழா ரத்து!
விஜய் பிறந்தநாள் விழா ரத்து!
விஜய் பிறந்தநாள் விழா ரத்து!

விஜய் பிறந்தநாளையொட்டி சென்னையில் நாளை நடைபெற இருந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ரத்து செய்துவிட்டதாக அறிவித்து இருக்கிறார்கள்.

ஜுன் 22ம் தேதி விஜய் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது ரசிகர்கள் சென்னையில் நாளை பிரம்மாண்டமான விழாவிற்கு ஏற்பாடு செய்து இருந்தார்கள். விழாவுக்காக மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

இவ்விழாவில் விஜய் பங்கேற்று 3,900 ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள், ஏழை மாணவ - மாணவிகளுக்கு உதவி தொகை, கம்ப்யூட்டர்கள், தையல் எந்திரம், ஊனமுற்றோருக்கு மூன்று சக்கர சைக்கிள் என பிரம்மாண்ட விழாவாக ஏற்பாடு செய்து இருந்தார்கள். இதற்காக தமிழகம் முழுவது இருந்து ரசிகர்கள் அழைக்கப்பட்டு இருந்தார்கள்.

இந்நிலையில் இவ்விழா ரத்து செய்யப்பட்டதாக அறிவித்தார்கள். இது குறித்து விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் " 8-ந்தேதி நடக்கவிருந்த விஜய் ரூ.1 கோடி நலத்திட்ட பணிகள் வழங்கும் விழா ரத்தாகியுள்ளது. எனவே வெளியூர்களில் இருந்து ரசிகர்கள் யாரும் சென்னை வரவேண்டாம்" என்று கூறியுள்ளார்.

ரத்து குறித்து விசாரித்ததில் மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள இந்த கல்லூரியில் விழா நடந்தால் விஜய் ரசிகர்கள் குவிந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று போலீசார் கருதி விழாவிற்கு அனுமதி மறுத்து இருக்கிறார்கள்.