Published:Updated:

'விஸ்வரூபம் 2'ல் கேமராமேன் ஷாம்தாத்!

Vikatan Correspondent
'விஸ்வரூபம் 2'ல் கேமராமேன் ஷாம்தாத்!
'விஸ்வரூபம் 2'ல் கேமராமேன் ஷாம்தாத்!
'விஸ்வரூபம் 2'ல் கேமராமேன் ஷாம்தாத்!

''விஸ்வரூபம் 2' படம் குறித்து தமிழ் சினிமா மிகப் பெரிய எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருக்கிறது. கமல்ஹாசன் 'விஸ்வரூபம்' எடுக்கும்போது பார்ட் 2  படத்துக்கான ஃபுட்டேஜ்ஜையும் எடுத்து விட்டதாகத் தான் நம்பிக்கொண்டிருந்தோம்.

ஆனால், 'விஸ்வரூபம் 2' படத்துக்கான ஒளிப்பதிவாளர் மாறியிருக்கிறார் என்றால் இன்னும் 'விஸ்வரூபம் 2' படத்துக்கான காட்சிகள்  முழுமையாக எடுக்கப்படவில்லை என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது.

'விஸ்வரூபம்' படத்தில் சானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். அவருக்குப் பதில் 'விஸ்வரூபம் 2' படத்தில் சாகசம் படத்தின் ஒளிப்பதிவாளர் ஷாம்தத் வ ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறார்.

ப்ரஸ்தனம் , பிந்துமாதவி தெலுங்கில் அறிமுகமான 'ஆவக்காய் பிரியாணி' போன்ற தெலுங்குப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் ஷாம்தத். 'சாக்சம்' படத்தின் ஃபுட்டேஜ் பார்த்த பிறகே கமல் ஷாம்தத்தை 'விஸ்வரூபம் 2' படத்துக்கான ஒளிப்பதிவாளராக நியமித்து இருக்கிறார்.

தாய்லாந்தில் 'விஸ்வரூபம் 2' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்து இருக்கிறது. 'விஸ்வரூபம் 2' படத்துக்கான பெரும்பாலான காட்சிகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்டன. இறுதிக் காட்சிகள் டெல்லியில்  எடுக்கப்பட இருக்கின்றன. ஷங்கர் - இஷான் - லாய் 'விஸ்வரூபம் 2' படத்துக்கான ஆடியோ 3டி ஒலிப்பதிவை செய்கிறார்.