Published:Updated:

விஜய் சம்மதிச்சா நான் டைரக்டர் ! : விஷால்

விஜய் சம்மதிச்சா நான் டைரக்டர் ! : விஷால்
விஜய் சம்மதிச்சா நான் டைரக்டர் ! : விஷால்

விஜய் சம்மதிச்சா நான் டைரக்டர் ! : விஷால்

விஷால், ஷமீரா ரெட்டி நடிப்பில் வெளிவர இருக்கும் படம் 'வெடி'. பிரபுதேவா இயக்க, விஜய் ஆண்டனி இசையமைத்து இருக்கிறார்.

இப்படம் குறித்த தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார் நடிகர் விஷால்.

" எவ்வளவு பெரிய பட்ஜெட் படமானாலும் ரெண்டே வாரம்தான் தாங்குது. 'வெடி' படத்தை சென்னையில் மட்டும் 25 தியேட்டர்களுக்கு மேல் ரிலீஸ் பண்ண போறோம். சென்னை மாதிரியே தமிழகம் முழுக்க வெளியிட்டிருக்கிறோம். இப்படம் வசூலை குவிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

தெலுங்கில் வெற்றி பெற்ற எந்தவொரு படத்தையும் நான் ரீமேக் பண்ணனும்னு நினைப்பேன். அதையும் மீறி வேறு யாராவது ஹீரோ அந்த படங்களில் நடிப்பதற்காக ஒத்து கொண்டால் என்னால தாங்கவே முடியாது. அப்படி கை நழுவிப்போச்சே என்று நான் கவலைப்பட்ட படம் 'சந்தோஷ் சுப்ரமணியம்'. ஜெயம் ரவி என்னோட நெருங்கிய நண்பராக இருந்தாலும் கூட, பொறாமையா இருந்திச்சு. தெலுங்கில் 'சவுரியம்' படம் வெளிவந்ததும்  நான் அப்படிதான் ஃபீல் பண்ணினேன். இந்த படத்தை தமிழ்ல நாம தான் பண்ணனும்னு தோணுச்சு. ரீமேக் உரிமையை வாங்கியதும்  எனது மனதில் தோன்றிய ஒரே இயக்குனர் பிரபுதேவா மாஸ்டர்தான்.

'சவுரியம்' படத்தை விட 'வெடி' படத்திற்கு மிக அற்புதமாக திரைக்கதை அமைச்சு இயக்கியிருக்கிறார். 'அவன் இவன்' படத்தில் நடித்த பின்பு என்னோட நடிப்பை  பற்றி ரசிகர்கள் நிறைய பேசினாங்க. இந்த படம் அந்த நல்ல பெயரை காப்பாற்றி கொடுக்கும். அதுமட்டுமல்ல, அந்த படத்திற்கு இணையா இதில் நடித்து இருக்கிறேன்."

நீங்க எப்போ சார் இயக்குனர் அவதாரம் எடுக்க போறீங்க என்ற கேள்விக்கு, " விஜய்க்காக ஒரு கதை வச்சுருக்கேன். நடிச்சா அவர் மட்டும்தான் அதில் நடிக்க முடியும். அவர் சம்மதிச்சா இயக்க  நான் ரெடி" என்றார் விஷால்.

செப் 30ம் தேதி வெடியை வெள்ளித்திரையில் வெடிக்க வைக்க இருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு