Published:Updated:

கவர்ச்சிக்கு தடா- அஞ்சலி அதிரடி முடிவு!

Vikatan Correspondent
கவர்ச்சிக்கு தடா- அஞ்சலி அதிரடி முடிவு!
கவர்ச்சிக்கு தடா- அஞ்சலி அதிரடி முடிவு!
கவர்ச்சிக்கு தடா- அஞ்சலி அதிரடி முடிவு!

'கற்றது தமிழ்', 'அங்காடித்தெரு' படங்களில் இழுத்துப் போர்த்திக் கொண்டு குடும்பப்பாங்காக நடித்தார் அஞ்சலி. 'பொண்ணுனா இப்படித்தான் இருக்கணும்' என்று பலரும் சொல்லும் அளவுக்கு அந்தப் படங்கள் அமைந்தன.

திடீரென என்ன ஆனதோ தெரியவில்லை. ஆடைகளைக் குறைத்து கவர்ச்சி(?) காட்டினார். தொடர்ந்து இரண்டு, மூன்று படங்கள் கவர்ச்சி காட்டியும் 'கற்றது தமிழ்', 'அங்காடித்தெரு' படங்களுக்கு கிடைத்தது போல பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.

அவருடைய தொப்பையும், வடிவே இல்லாத உடலும் ரசிகர்களுக்குப் பிடிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் சிறிய நமீதா போலவே இருந்தார் அஞ்சலி. இதனால் அவர் காட்டிய கவர்ச்சி, வாயில் இருந்து ஜொள்ளை வரவைப்பதற்குப் பதிலாக வாந்தியைத்தான் வரவைத்தது.

இதைக்கண்டு நொந்துபோன அஞ்சலி, கவர்ச்சியாக நடிக்குமாறு தனக்கு ஆலோசனை வழங்கியவர்களிடம் கத்தித் தீர்த்துவிட்டார். 'நான் பாட்டுக்கும் ஒழுங்கா நல்ல ரூட்டுல போய்க்கிட்டிருந்தேன். என்ன இப்படி படுகுழியில தள்ளிட்டீங்களே...' என்று புலம்பினாராம்.

இனிமேல் குடும்பப் பாங்கான வேடத்தில் மட்டுமே நடிப்பது என முடிவு எடுத்தார் அஞ்சலி. சில மாதங்களுக்கு முன்பு வெளியான 'வத்திக்குச்சி' படத்திலும் அப்படித்தான் நடித்தார்.

தற்போது கவர்ச்சி காட்டி நடிக்கும்படி இரண்டு வாய்ப்புகள் வந்ததாம். அவர்களைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்ட அஞ்சலி, 'எம் பொழப்புல மண்ணப் போட்டுறாதீங்க' என்று கெஞ்சினாராம். அதோடு, 'குடும்பப் பாங்கான கேரக்டராக இருந்தால் சம்பளத்தைக் கூட குறைத்துக் கொள்கிறேன்' என்று சொல்லியிருக்கிறார்.