Published:Updated:

'பெரிய ஹீரோக்களுக்கு மட்டும் ஓ.கே.' - நஸ்ரியா முடிவு!

விகடன் விமர்சனக்குழு
'பெரிய ஹீரோக்களுக்கு மட்டும் ஓ.கே.' - நஸ்ரியா முடிவு!
'பெரிய ஹீரோக்களுக்கு மட்டும் ஓ.கே.' - நஸ்ரியா முடிவு!
'பெரிய ஹீரோக்களுக்கு மட்டும் ஓ.கே.' - நஸ்ரியா முடிவு!

'நேரம்' படத்தில் அறிமுகமானவர் கேரளாவைச் சேர்ந்த நஸ்ரியா. தமிழ்நாட்டுக்கே இப்போது நஸ்ரியா பித்து பிடித்திருக்கிறது. தன்னுடைய புன்னகையால் தமிழ் ரசிகர்களைச் சாய்த்து விட்டார் நஸ்ரியா.

'நேரம்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் வரிசை கட்டி வந்தன. ஆர்யா - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் 'ராஜா ராணி' படத்தில் நஸ்ரியா தான் இரண்டாவது ஹீரோயின்.

அதற்கடுத்து தனுஷுக்கு ஜோடியாக 'நையாண்டி' படத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு, 'அட்டகத்தி' ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திலும் நஸ்ரியா தான் ஹீரோயின்.

இப்படி கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் நடிக்கும் படங்கள் வரிசைகட்டி வருவதால், இனிமேல் பெரிய ஹீரோக்களுடன் மட்டும் தான் நடிப்பது என்ற முடிவை எடுத்திருக்கிறாராம்.

கார்த்தியுடன் நடிக்க கதை கூட கேட்கவில்லையாம். கதை எப்படி இருந்தால் என்ன? வந்த வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளலாம் என நினைக்கிறாராம்.

இதற்காக தன்னிடம் வந்த சில பட்ஜெட் இயக்குநர்களையும், புது ஹீரோக்களையும் கண்டுகொள்ளவே இல்லையாம் நஸ்ரியா.