Published:Updated:

'தலைவா' - ஜெயலலிதாவிற்கு விஜய் கோரிக்கை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
'தலைவா' - ஜெயலலிதாவிற்கு விஜய் கோரிக்கை!
'தலைவா' - ஜெயலலிதாவிற்கு விஜய் கோரிக்கை!

'தலைவா' - ஜெயலலிதாவிற்கு விஜய் கோரிக்கை!

'தலைவா' - ஜெயலலிதாவிற்கு விஜய் கோரிக்கை!

'தலைவா' பிரச்சினையில் முதல்வர் ஜெயலலிதா தலையிட வேண்டும் என்று விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆகஸ்ட் 9ம் தேதி  வெளியாக இருந்த 'தலைவா' திரைப்படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகவில்லை. சட்டம் ஒழுங்கு உள்ளிட்டவற்றை காரணம் காட்டி படம் வெளியாவதில் தாமதமாகி வருகிறது.

இந்நிலையில் விஜய், முதல்வர் ஜெயலலிதா இப்பிரச்னையில் தலையிட வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில் விஜய் தெரிவித்து இருப்பது :

திருட்டி சி.டி தயாரிப்பது விற்பதும் சட்டப்படிக் குற்றமாகும். அன்பு ரசிகர்களே 'தலைவா' திரைப்படம் தமிழ்நாட்டில் இன்னும் வெளிவரவில்லை. அதற்குள் திருட்டு சி.டியை தயாரித்தாலோ விற்றாலோ உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்துங்கள்.

நமது முதல்வர் புரட்சித் தலைவி மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள் தமிழகத்தில் ஒரு சிறப்பான ஆட்சியை தந்து வருகிறார்கள். என்.எல்.சி பிரச்சினை, காவேரி நீர் பிரச்சினை, அம்மா உணவகம், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி, லேப்டாப் உதவி, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் இப்படி எத்தனையோ நல்ல திட்டங்களை திறம்பட செயல்படுத்தி வருகிறார்கள்.

இந்தியாவில் தமிழகத்தை முதல் மாநிலமாக உயர்த்த வேண்டும் என்பதற்காக கடினமாக உழைத்து வருகிறார். அவருடைய வெளிப்படையான செயல்பாடுகளும் அணுகுமுறையும் எனக்கு எப்போதும் பிடிக்கும். எல்லோருக்கும் நல்லது செய்யும் நமது முதல்வர் அவர்கள் 'தலைவா' பிரச்சினையிலும் தலையிட்டு, விரைவில் தமிழகமெங்கும் 'தலைவா' வெளிவர ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அதுவரை என் ரசிகர்கள் ஒவ்வொருக்கும் பொறுமையோடு காத்திருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் " என்று தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு