Published:Updated:

தீபாவளிப் பரிசாக கோச்சடையான்!

தீபாவளிப் பரிசாக கோச்சடையான்!
தீபாவளிப் பரிசாக கோச்சடையான்!
தீபாவளிப் பரிசாக கோச்சடையான்!

ரஜினி படம் என்றாலே எதிர்பார்ப்புகளுக்குப் பஞ்சம் இருக்காது. அதுவும் 'கோச்சடையான்' பார்க்க ஒட்டுமொத்த சினிமா உலகமே காத்துக் கொண்டு இருக்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் 'கோச்சடையான்' படத்திற்கான இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. தீபாவளி அன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதால் டப்பிங் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

தற்போது ரஜினி 'கோச்சடையான்' தெலுங்கு வெர்சனுக்கு தெலுங்கு டப்பிங் பேசிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் 'கோச்சடையான்' தெலுங்கு படத்திற்கு ' விக்ரமசிம்ஹா' என்று பெயர் வைத்திருப்பதாக படத்தின் டைரக்டர் சவுந்தர்யா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

'விக்ரமசிம்ஹா' ஆந்திரத்தைச் சேர்ந்த ஒரு குறுநில மன்னன். அவனது சரித்திரமும், 'கோச்சடையான்' கதையும் ஒரே மாதிரியாக இருப்பதால் இந்த டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் ஒரே நேரத்தில் 'கோச்சடையான்' படத்தை வெளியிட சவுந்தர்யா திட்டமிட்டிருக்கிறார்.

ரஜினியை அடுத்து படத்தில் நடித்திருக்கும் சரத்குமார், நாசர், ருக்மணி, ஆகியோரும் தெலுங்கு டப்பிங் பேச இருக்கிறார்கள்.