Published:Updated:

ரிலீஸ் ஆகாத 'மத கஜ ராஜா' - அப்செட்டில் விஷால் !

Vikatan Correspondent
ரிலீஸ் ஆகாத 'மத கஜ ராஜா' - அப்செட்டில் விஷால் !
ரிலீஸ் ஆகாத 'மத கஜ ராஜா' - அப்செட்டில் விஷால் !

ஏகப்பட்ட சதிகளையும், ப்ரச்னைகளையும் விஷால் சந்தித்த பிறகே 'சமர்'படம் ரிலீஸ் ஆனது. இனி ஒரு முறை இப்படி ஒரு மோசமான சம்பவம் நடக்கக்கூடாது என்பதற்காகத்தான் விஷால் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார்.

சில மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட 'மத கஜ ராஜா' படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சியில் இறங்கினார். எல்லா பிரச்னைகளையும் தாண்டி  'மத கஜ ராஜா' படம் நாளை ரிலீஸாக இருந்தது.

ஆனால், ஃபைனான்சியர் பிரச்னை காரணமாக நாளை 'மத கஜ ராஜா' ரிலீஸாகவில்லை.  

ஃபைனான்சியர் மதுரை அன்புவிடம் பல கோடி கடன் வாங்கி ரிலீஸ்  வேலையைக் கவனித்து வந்தார் விஷால்.

இந்த சூழலில் 'மத கஜ ராஜா' படத்துக்கு பைனான்ஸ் கொடுத்த 14 கோடியைக் கொடு, அல்லது  உடனே 9 கோடியைக் கொடு . இல்லையென்றால் படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டேன் என்று ஃபைனான்சியர் அன்பு மிகப் பெரிய குண்டைப் போட்டு இருக்கிறார்.

இதனால் அப்செட்டான விஷாலுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.  அதிக மன உளைச்சலில் தவித்த விஷால் இப்போதுதான் மருத்துவமனை சென்று வீடு திரும்பியிருக்கிறார்.

'மத கஜ ராஜா' விநாயகர் சதுர்த்தி ( செப்டம்பர் 9 திங்கள் கிழமை )அன்று ரிலீஸாகிறது.