Published:Updated:

ஹீரோக்கள் வேறு... ஹீரோயின் ஒண்ணு!

Vikatan Correspondent
ஹீரோக்கள் வேறு... ஹீரோயின் ஒண்ணு!
ஹீரோக்கள் வேறு... ஹீரோயின் ஒண்ணு!

தெலுங்கு பூமியில் ஜூனியர் என்.டி.ஆரை இயக்கும் படத்தை தள்ளிவைத்து இருக்கிறாராம், ஹரி. அதற்குள், ஏற்கெனவே ஒப்பந்தமான தமிழ்ப் படத்தை முடித்து விடலாம் என்று கார்த்திக்கை அணுகி இருக்கிறார்.

தனது படத்தை தவிர்த்து, ஹரி தெலுங்குப் படத்தை தேடிப்போனதால் கடுப்பானார் கார்த்தி. அவருக்கு கொடுத்திருந்த கால்ஷீட் தேதிகளை அப்படியே லம்ப்பாகத் தூக்கி ‘அட்டகத்தி’ இயக்குனர் ரஞ்சித்துக்கு கொடுத்து விட்டார்.

ரஞ்சித் டைரக்ஷன் செய்யும் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக லட்சுமி மேனனையும் ஒப்பந்தம் செய்து விட்டனர்.

ஆவேசமான ஹரி விக்ரமை தேடிப்போக, ‘சாமி’ படத்துக்குப் பிறகு ஹரி - விக்ரம் கூட்டணி மீண்டும் இணைகிறது. வேண்டுமென்றே கார்த்தியின் ஜோடியாக நடிக்கும் லட்சுமி மேனனை விக்ரமின் ஜோடியாக்கி இருக்கிறார், ஹரி.

இரண்டு படத்துக்கு ஒரே தேதியைக் கொடுத்து கால்ஷீட் குளறுபடியில் கேரளத்துக்கிளி 'கிலி'யாகாமல் இருந்தால் சரி.