Published:Updated:

ரீரிலிஸ் ஆகும் அன்பே சிவம்!

Vikatan Correspondent
ரீரிலிஸ் ஆகும் அன்பே சிவம்!
ரீரிலிஸ் ஆகும் அன்பே சிவம்!

கமல் நடித்த முத்திரைப் படங்களில் ஒன்று 'அன்பே சிவம்'. பத்து வருடங்களுக்கு முன்பு வெளியான 'அன்பே சிவம்' படத்தில் கமல், மாதவன், கிரண், நாசர், சந்தானபாரதி நடித்திருந்தார்கள். சுந்தர்.சி டைரக்ட் செய்திருந்தார்.

வித்யாசாகர் இசையில் உருவான இப்படத்தை லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்தது. ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் ரிலீஸ் செய்தது.

அன்பு ஒன்றுதான் எல்லாவற்றிலும் சிறந்தது என்கிற கருத்தை ஆணித்தரமாக வலியுறுத்தி எடுக்கப்பட்ட 'அன்பே சிவம்' படம் அப்போது சரியாக ரீச் ஆகவில்லை.

 இப்போதுள்ள இளைஞர்கள் 'அன்பே சிவம்' படத்தை சிலாகித்து ரசிக்கிறார்கள். படத் தயாரிப்பு நிறுவனமான லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துக்கும் படத்தை ரீ- ரிலீஸ் பண்ணச் சொல்லி கடிதமும், தொலைபேசிகளும் வருகிறதாம்.

இதனால் படத்தை ரி ரீலீஸ் பண்ணும் முயற்சியில் தயாரிப்பாளர் கே.முரளிதரன் ஈடுபட்டிருக்கிறார். '' ‘அன்பே சிவம்’ படத்தை டிஜிட்டல்படுத்தி ஆடியோ தரம் உயர்த்தி மறுபடியும் வெளியிட முடிவு செய்திருக்கிறோம். கமலின் அனுமதிக்காக காத்திருக்கிறோம்" என்கிறார் முரளிதரன்.