Published:Updated:

ஆர்யாவின் ஆடை ரகசியம்!

Vikatan Correspondent
ஆர்யாவின் ஆடை ரகசியம்!
ஆர்யாவின் ஆடை ரகசியம்!
ஆர்யாவின் ஆடை ரகசியம்!

எந்த பட விழாவுக்கு வந்தாலும் ரிச்சான உடைகளைத்தான் ஆர்யா அணிந்து வருவார். திரைப்படங்களில் நடிக்கும்போது அணியும் காஸ்டியூம்களை விட அவை பிரமாதமாக இருக்கும்.

ஆனால், சமீபகாலமாய் ஆடை விஷயத்தில் அந்த அளவுக்கு ஆர்வம் காட்டுவதில்லை ஆர்யா. மிக சாதாரணமாக, அதாவது கிராமத்து ஹீரோக்களைப்போன்று கலர் கலராக அணிந்து வருகிறார்.

இந்த திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம்? என்று ஆர்யாவைக்கேட்டால், ''சினிமாவோ, அரசியலோ எதுவாக இருந்தாலும் பந்தாவாக டிரஸ் அணிந்து வருபவர்களை விட, சிம்பிளா டிரஸ் அணிந்து வருகிறவர்களுக்கு தனி மரியாதை கிடைக்கிறது. அவர்களைப் பார்க்கிறவர்கள் எளிமையாக வருவதாக பெருமையாகப் பேசுகிறார்கள்.

அதனால்தான், இப்போது நானும் எளிமைக்கு மாறி விட்டேன். மஞ்ச கலர், சிவப்பு கலர் என்று கண்ணைப் பறிக்கிற டிரஸ் அணிந்து கலக்கப்போகிறேன்.

முக்கியமாக, ரசிகர்களில் நானும் ஒருவனாகி அனைவரையும கவரப்போகிறேன்'' என்கிறார்.

நம்பமுடியலையே பாஸ் என்றால். '' வழக்கம்போல ஜாலியாவே சொல்றேன். அப்பவாவது எக்ஸ்ட்ரா நாலு பேர் நம்மைப் பார்ப்பாங்கன்னுதான் இப்படி டிரஸ் பண்றேன். போதுமா?'' என்று சிரிக்கிறார்.