Published:Updated:

'பேட்டை ரவுடி'யாகும் சூர்யா!

Vikatan Correspondent
'பேட்டை ரவுடி'யாகும் சூர்யா!
'பேட்டை ரவுடி'யாகும் சூர்யா!
'பேட்டை ரவுடி'யாகும் சூர்யா!

 'சிங்கம் 2'  படம் ரிலீஸ் ஆனதும், லிங்குசாமியின் இயக்கத்தில் மீண்டும் போலீஸ் கதையில் நடிக்க சூர்யா தயாரானார்.

''அது என்னுடைய பகலவன் கதை'' என்று சீமான் அதிரடியாக அறிவித்ததும், இன்னொரு கதையை அவசர அவசரமாக உருவாக்கினார் லிங்குசாமி.

படத்துக்கு  முதலில், ‘ரவுடி’ என்று டீசன்ட்டாகப்  பெயர்சூட்டி இருந்தனர். இந்த டைட்டில் ரகசியம் மெள்ளக் கசிய ஆரம்பித்தது.

லிங்குசாமி, ''படத்தின் டைட்டில் ரவுடி இல்லை. விரைவில் டைட்டிலை அறிவிக்கிறோம்'' என்றார்.

இப்போது அந்ததலைப்பை மென்மேலும் மெருகூட்டும் வண்ணம் ‘பேட்டை ரவுடி’ பெரும் பொருள்படும்படி பெயர் மாற்றி உள்ளனர்.

கௌதம் மேனன் படத்தில் நடிப்பதற்காக அவரிடம் சூர்யா 10 கோடி அட்வான்ஸ் வாங்கி இருந்தார் . இப்போது , அந்தத் தொகையை கௌதமிடம் திருப்பி கொடுத்து விட்டார்!