Published:Updated:

சீனியர்களுக்கு வாய்ப்பளிக்கும் விஜய் சேதுபதி!

Vikatan Correspondent
சீனியர்களுக்கு வாய்ப்பளிக்கும் விஜய் சேதுபதி!
சீனியர்களுக்கு வாய்ப்பளிக்கும் விஜய் சேதுபதி!
சீனியர்களுக்கு வாய்ப்பளிக்கும் விஜய் சேதுபதி!

'காதலில் சொதப்புவது எப்படி', 'சூது கவ்வும்', 'பீட்சா', 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்', 'ராஜா ராணி', 'அட்டகத்தி' என தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குநர்களின் படங்கள் ஹிட் தருகின்றன.

இதனால், கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி, பொன்ராம், பாலாஜி மோகன், அட்லி, ரஞ்சித் என யூத் இயக்குநர்களைத் தேடித் தேடி கால்ஷீட்டைத் தருகின்றனர் இன்றைய முன்னணி ஹீரோக்கள்.

இதில், விஜய் சேதுபதி மட்டும் வித்தியாசப்படுகிறார். எல்லாரும் யூத்துகளைத் தேடிக்கொண்டிருக்க, இவர் மட்டும் சீனியர் இணை, துணை இயக்குநர்களுக்கு கால்ஷீட் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

இளவயதில் தன்னுடைய ரூம் மேட்டாக இருந்த சுதாகருக்கு, 'சங்குத்தேவன்' படத்தை இயக்கும் வாய்ப்பை அளித்துள்ளார் விஜய் சேதுபதி. இவர், இயக்குநர் ஹரியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.