Published:Updated:

ஆர்யாவுக்கு ஜோடியாக ஸ்ருதி?

Vikatan Correspondent
ஆர்யாவுக்கு ஜோடியாக ஸ்ருதி?
ஆர்யாவுக்கு ஜோடியாக ஸ்ருதி?
ஆர்யாவுக்கு ஜோடியாக ஸ்ருதி?

'மாப்பிள்ளை', 'அஞ்சாதே', 'நான் அவன் இல்லை' போன்ற படங்களைத் தயாரித்தவர் நேமி சந் ஜபக். இவர் தற்போது ஆர்யாவை வைத்து ஒரு படத்தைத் தயாரிக்க உள்ளார்.  

இந்தப் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்க அமலா பால், லட்சுமி மேனன், ப்ரியா ஆனந்த், நஸ்ரியா, பிந்து மாதவி, சமந்தா, ஸ்ருதி, அனுஷ்கா, நயன்தாரா என பல பெயர்களைத் தயாரிப்பாளர் பரிந்துரைக்க... ஆர்யாவோ ஸ்ருதி பெயரை முதலில் டிக் அடித்தாராம்.

ஆர்யாவுக்கு நெருக்கமான அனுஷ்கா, நயன்தாராவை விட்டுவிட்டு, ஸ்ருதி பக்கம் ஆர்யா தாவியது ஏன்? எனத் தெரியாமல் தயாரிப்பாளர் குழப்பத்தில் இருக்கிறாராம்.

தெலுங்கு, இந்தியில் பிஸியாக இருக்கும் ஸ்ருதி, இதற்கு ஒப்புக் கொள்வாரா எனத் தெரியவில்லை. ஆர்யாவின் ஆசை நிறைவேறுகிறதா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.