Published:Updated:

எம்.பி. குட்டைப் பாவாடையில் நடிப்பதா?

Vikatan Correspondent
எம்.பி. குட்டைப் பாவாடையில் நடிப்பதா?
எம்.பி. குட்டைப் பாவாடையில் நடிப்பதா?

ரம்யா 'குத்து',  'கிரி', 'வாரணம் ஆயிரம்', 'பொல்லாதவன்' உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களில் நடித்தார். அதற்குப்பிறகு தாய்மொழியான கன்னடப்படங்களில் கவனம் செலுத்தினார்.

திடீரென கர்நாடக அரசியலில் தீவிரமாக களமிறங்கினார். பாராளுமன்ற இடைத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாகவும் வெற்றி பெற்றார்.

இதனால் தொடர்ந்து சினிமாவில் நடிப்பதை நிறுத்தினார். ரம்யா கடைசியாக நடித்த ‘நீர்டோஸ்’ என்ற கன்னடப் படம் பாதியில் நிற்கிறது.

இதனால் கடுப்பான அந்தப்படத்தின் தயாரிப்பாளரும், ஹீரோவுமான ஜெகதீஷ்,  ரம்யா மீது புகார் கூறினார்.

'' ரம்யா எம்.பி.யாகி விட்டதால் அவர் நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டதாகச் சொல்கிறார்கள். அவர் என் படத்தில் நடிக்க மறுப்பது தவறு.

அவர் விலகுவதாக இருந்தால் படத்துக்கு இதுவரை செலவிட்ட ரூ. 4 கோடியை திருப்பி தர வேண்டும் '' என்றார்.


ரம்யாவும் இதற்குப் பதில் அளித்திருக்கிறார்.  ''மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து எம்.பி.யாக தேர்வு செய்து பாராளுமன்றத்துக்கு அனுப்பியிருக்கிறார்கள். அதனால் இனிமேல் என்னால் சினிமாவில் நடிக்க முடியாது. எனக்குத் தெரிந்து அரசியலுக்கு சென்றபிறகு எந்த நடிகையும் மீண்டும் படங்களில் நடிக்கவில்லை.

அப்படியிருக்கும் போது எம்.பி.யான பிறகு நான் குட்டை பாவடையும், கையில்லாத ரவிக்கையும் அணிந்து கொண்டு மரத்தை சுற்றி ஹீரோவுடன் டூயட் பாடி ஆடிக்கொண்டிருக்க முடியுமா? '' என்று கூறியிருக்கிறார் ரம்யா.