Published:Updated:

சுசீந்திரன் - விக்ராந்த் - விஷால் விறு விறு!

Vikatan Correspondent
சுசீந்திரன் - விக்ராந்த் - விஷால் விறு விறு!
சுசீந்திரன் - விக்ராந்த் - விஷால் விறு விறு!

'பாண்டிய நாடு ' படத்தின் வெற்றி விஷாலை உற்சாகப்படுத்தி இருக்கிறது.

அந்த சந்தோஷம் தொடர் வேண்டும் என்பதற்காக,  சுசீந்திரனுடன் மீண்டும் விஷால் இணைகிறார்.

'நான் சிகப்பு மனிதன்' படம் முடிந்தவுடன் சுசீயின் படத்தில் நடிக்கப் போகிறார், விஷால்.

அதற்குள் சுசீ விஷ்ணுவை வைத்து 'வீர தீர சூரன்' படத்தை முடிக்க இருக்கிறார்.

'பாண்டிய நாடு' படத்தில் விக்ராந்த்தின் நடிப்பும் பேசப்பட்டது.

பல வருட நட்பின் அடையாளமாக, இப்போது விக்ராந்த் ஹீரோவாக நடிக்கும் படத்தை விஷால் தயாரிக்கிறார்.

''விஷால் என் நண்பன். எனக்காக பெரிய விஷயங்களில் ஆர்வமுடன் ஈடுபடுகிறான்.

அவனுக்கு நான் எப்படி நன்றி சொல்லப் போறேன்னு தெரியலை'' என்று விஷாலின் நட்பால் நெகிழ்ந்து போயிருக்கிறார் விக்ராந்த்.