Published:Updated:

ஒரே மாதத்தில் ரிலீஸ் ஆகும் ரஜினி, கமல், விஜய், அஜித் படங்கள்?

Vikatan Correspondent
ஒரே மாதத்தில்  ரிலீஸ் ஆகும் ரஜினி, கமல், விஜய், அஜித் படங்கள்?
ஒரே மாதத்தில் ரிலீஸ் ஆகும் ரஜினி, கமல், விஜய், அஜித் படங்கள்?
ஒரே மாதத்தில்  ரிலீஸ் ஆகும் ரஜினி, கமல், விஜய், அஜித் படங்கள்?

இந்த ஆண்டின் மாபெரும் ஹிட் படமாக 'கோச்சடையான்' இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்.

ஆகஸ்டு, அக்டோபர் என்று மாறி மாறி மாதக்கணக்கில் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போடப்பட்டது.

இறுதிக்கட்டப் பணிகள் முடிவடையவில்லை என்று படக்குழுவினர் சொன்னபோதும் கூட, நிச்சயம் ரஜினியின் பிறந்த நாளில் 'கோச்சடையான்' ரிலீஸ் ஆகும் என்று நம்பப்பட்டது.

ஆனால், அப்படி எதுவும் நடக்கப்போவது இல்லை.ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12ல் 'கோச்சடையான்' இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மட்டுமே நடைபெற இருக்கிறது.

 ஜனவரி 10 அன்று 'கோச்சடையான்', 'ஜில்லா', 'வீரம்' படங்கள் ரிலீஸ் ஆகின்றன. இதற்கிடையில் , 'விஸ்வரூபம்2' படத்தை எப்போது வெளியிடுவது என்று யோசித்து வந்த கமல், ஜனவரி 26ல் ரிலீஸ் செய்ய இருக்கிறாராம்.

 ரஜினி, கமல், அஜித், விஜய் படங்கள் ஒரே சமயத்தில் களத்தில் குதிக்கின்றன.

ஒரே மாதத்தில்  ரிலீஸ் ஆகும் ரஜினி, கமல், விஜய், அஜித் படங்கள்?