Published:Updated:

வரிவிலக்கு கேட்டு உதயநிதி வழக்கு!

Vikatan Correspondent
வரிவிலக்கு கேட்டு உதயநிதி வழக்கு!
வரிவிலக்கு கேட்டு உதயநிதி வழக்கு!
வரிவிலக்கு கேட்டு உதயநிதி மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளார்.
'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்துக்கு வரிவிலக்கு அளிக்கவில்லை என்பதற்காக நீதிமன்றம் சென்றார் உதயநிதி. அதற்குப் பிறகே வரிவிலக்கு கிடைத்தது.
தற்போது 'இது கதிர்வேலன் காதல்' படத்துக்கு வரிவிலக்கு கிடைக்காததால்  வழக்கு தொடர்ந்துள்ளார்.
''உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு கமிஷன் அமைத்து எங்களது திரைப்படத்தை பார்வையிட்டு இது வரிவிலக்கு பெற தகுதியானதா? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
அறிக்கையின் அடிப்படையில் வரிவிலக்கு வழங்குவது குறித்து வணிக வரித்துறை கமிஷனர் தகுந்த முடிவு மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்," என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த மனு நீதிபதி தனபாலன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி வணிக வரித்துறை கமிஷனர் பதில் மனுதாக்கல் செய்ய நோட்டீஸ்  அனுப்ப உத்தரவிட்டார்.
இந்த வழக்கு வருகிற வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.