Published:Updated:

கேன்ஸ் திரை விழாவில் கோச்சடையான்!

Vikatan Correspondent
கேன்ஸ் திரை விழாவில் கோச்சடையான்!
கேன்ஸ் திரை விழாவில் கோச்சடையான்!

சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் 125கோடி பட்ஜெட்டில் தயாரான படம் 'கோச்சடையான்'. இதில் மோஷன் கேப்சர் 3டி தொழில்நுட்பம் எனும் நடிப்புப் பதிவாக்கத் தொழில்நுட்பத்தில்  நடித்துள்ள முதல் இந்திய நடிகர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார் ரஜினி.

 ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார். ஒன்பது பாடல்கள் 'கோச்சடையான்' படத்தில் இடம்பெற்றுள்ளன.

கேன்ஸ் திரை விழாவில் கோச்சடையான்!

'கோச்சடையான்' தமிழ், தெலுங்கு. இந்தி, போஜ்புரி, பஞ்சாபி, மராட்டி என ஆறு மொழிகளில் தயாராகியுள்ளது.

இதற்கெல்லாம் மேன்மேலும் பெருமை சேர்க்கும் விதமாக கேன்ஸ் திரைப்படவிழாவில் 'கோச்சடையான்' படத்தைத் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.

உலக அரங்கில் தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்க்கப் போகும் படங்களின் பட்டியலில் 'கோச்சடையான்' இடம் பெற்றுவிட்டது.