Published:Updated:

வெல்கம் உத்ரா உன்னிகிருஷ்ணன்!

வெல்கம் உத்ரா உன்னிகிருஷ்ணன்!

வெல்கம் உத்ரா உன்னிகிருஷ்ணன்!

வெல்கம் உத்ரா உன்னிகிருஷ்ணன்!

வெல்கம் உத்ரா உன்னிகிருஷ்ணன்!

Published:Updated:
வெல்கம் உத்ரா உன்னிகிருஷ்ணன்!

'தலைவா' படத்திற்குப் பிறகு ஏ.எல்.விஜய் இயக்கும் படம் 'சைவம்'. இப்படத்தில் 'தெய்வத்திருமகள்' படத்தில் நடித்த பேபி சாரா, நாசர் உட்பட பலர் நடித்துக்கிறார்கள்.

தாத்தாவிற்கும், பேத்திக்குமான பாசத்தை மையாக வைத்து உருவாகிக்கொண்டிருக்கிறது இப்படம். ஏ.எல்.விஜய்யின் முந்தைய படங்களைப் போல இப்படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ்குமார் தான் இசையமைக்கிறார்.

நேற்று இப்படத்தில் இடம்பெறும் அழகு அழகு பாடலின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டது. அந்தப் பாடலை  ஏழு வயது சிறுமி பாடிக்கொண்டிருந்தார்.

அந்தச்சிறுமி வேறு யாருமல்ல பாடகர் உன்னிகிருஷ்ணனின் மகள் உத்ரா உன்னிகிருஷ்ணன் தான். நா.முத்துகுமாரின் அழகான வரிகளை மிகவும் அழகாய்ப் பாடினார் உத்ரா.

மழைமட்டுமா அழகு
 சுடும் வெயில் கூட ஒரு அழகு

மரம் மட்டுமா அழகு
 விழும் இலை கூட ஒரு அழகு என தொடரும் வரிகளை மிக அருமையான குரலில் ரசிக்கவைக்கிறார்  உத்ரா உன்னிகிருஷ்ணன்.

பேபி சாரா பாடுவதாக 'சைவம்'  படத்தில் இடம்பெறுகிறது இப்பாடல். இப்பாடலைப்பாடிய உத்ராவின் குரலை கேட்டு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் அசந்து விட்டாராம். இந்த வயதிலேயே இவ்வளவு அழகாகப் பாடுவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என உத்ராவின் குரலைக் கேட்ட அனைவரும் கூறுகின்றனர்.

வெல்கம் உத்ரா உன்னிகிருஷ்ணன்!