Published:Updated:

675 தியேட்டர்களில் 'மான் கராத்தே' ரிலீஸ்!

சிவகார்த்திகேயன், ஹன்சிகா, சதீஸ் ஆகியோர் நடிப்பில் திருக்குமரன் இயக்கியிருக்கும் படம் 'மான் கராத்தே'. இப்படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து ஏ.ஆர்.முருகதாஸ்  தயாரித்திருக்கிறார்.

இப்படம் ஏப்ரல் 4ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இப்படத்தை தமிழ்நாட்டில் மட்டும் 345 திரையரங்குகளில் வெளியிடப் போகிறார்களாம்.

மேலும் வெளிநாட்டில் 180, கர்நாடகா 60, கேரளா 55, வட இந்தியாவில் 35 என மொத்தமாக 675 திரையரங்குகளில் வெளியாக உள்ளது.  மல்டி பிளக்ஸ் திரையரங்குகளில் 2 தியேட்டர்களில் இப்படத்தை வெளியிடுகின்றனர்.

தியேட்டர் உரிமைக்காக மட்டும் இதுவரை 28 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியிருக்கிறது. மேலும், விஜய் டிவிக்கு வழங்கிய சேட்டிலைட் உரிமம் 9 கோடி ரூபாய்க்கும், வெளிநாட்டு உரிமை ரூ. 5 கோடிக்கும் விற்பனை ஆகியுள்ளது. ஆக மொத்தம் இப்படம் ரூ.42 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது.

சிவகார்த்திகேயனின் இந்த வளர்ச்சி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது!