Published:Updated:

ஏப்ரல் 9ல் ஆரம்பமாகிறது அஜித் பட ஷூட்டிங்!

Vikatan Correspondent
ஏப்ரல் 9ல் ஆரம்பமாகிறது அஜித் பட ஷூட்டிங்!
ஏப்ரல் 9ல் ஆரம்பமாகிறது அஜித் பட ஷூட்டிங்!

'வீரம்' படத்திற்குப் பிறகு கெளதம் மேனன் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் அஜித். இப்படத்தில் அனுஷ்கா ஹீரோயினாக நடிக்கிறார்.

ஏப்ரல் 9ல் ஆரம்பமாகிறது அஜித் பட ஷூட்டிங்!

இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.ஸ்ரீ சத்யசாய் மூவீஸ் சார்பாக ஏ.எம்.ரத்னம் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

போலீஸ் க்ரைம் த்ரில்லராக உருவாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 9ம் தேதி துவங்குகிறது.

அருண் விஜய் மற்றும் அரவிந்த் சாமி ஆகிய இருவரும் வில்லன்களாக நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும், படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.