Published:Updated:

அஜித் - கௌதம் மேனன் படத்தின் தலைப்பு ஆயிரம் தோட்டாக்களா?

Vikatan Correspondent
அஜித் - கௌதம் மேனன்  படத்தின் தலைப்பு ஆயிரம் தோட்டாக்களா?
அஜித் - கௌதம் மேனன் படத்தின் தலைப்பு ஆயிரம் தோட்டாக்களா?

'வீரம்' படத்தையடுத்து கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிரார் அஜித். இப்படத்தின் படப்பிடிப்பு டமீபத்தில் தொடங்கியது.

இப்படத்திற்கு 'ஆயிரம் தோட்டாக்கள்' எனப் பெயரிடப்பட்டுள்ளதாம். EM&C நிறுவனம் இப்பட பெயர் டிசைனை வடிவமைக்கிறது. அஜித்தின் பிறந்தநாளான மே1ம் தேதி இந்தப் பெயரை வெளியிட முடிவு செய்துள்ளார்களாம்.

அஜித் - கௌதம் மேனன்  படத்தின் தலைப்பு ஆயிரம் தோட்டாக்களா?

இப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பின் ஆரம்ப கட்டத்திலேயே  அஜித்தும் அஜித்தும் மோதும் சண்டைக்காட்சியைப் படமாக்கினார்கள்.

கெளதம் மேனனும் சிம்புவும் இணைந்திருக்கும் படத்தின் ஒளிப்பதிவாளர் டேன் மேகர்தர் தான் இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். பாடலாசிரியர் தாமரை இப்படத்தின் வசனங்களை எழுதுவதாகக் கூறப்படுகிறது.

ஆனால், டைட்டில் குறித்தும், வசனம் குறித்தும் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை.

டேன் மேகர்தர்
டேன் மேகர்தர்